Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஸ்டாலின் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 21, 2024
in Default
1
ஸ்டாலின் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்…
65
SHARES
105
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ எட்டியிருக்கும் நிலையில், இதற்கு மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேட்டுக்கு இது மிகப்பெரிய உதாரணம் என்று கூறியிருக்கும் அவர், இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணமானவர்கள் மீது அரசியல் பாரபட்சமின்றி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தன்னுடைய கண்டனத்தை எல் முருகன் தெரிவித்தார்.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முருகன், தனக்கு வாக்களித்த அத்தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மேட்டுப்பாளையம் சென்றார். அங்கு அவருக்கு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.கவினர் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வாகனத்தில் இருந்தவாறு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன், நான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்ததாலும் இந்த தொகுதியின் மக்களுக்காகவும், தமிழக வளர்ச்சிக்கு பணியாற்ற பிரதமர் தன்னை ராஜ்ஜியசபா எம்.பி பதவி அளித்து மத்திய இணை அமைச்சர் பதவியும் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முருகன், எனவே நான் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தேர்தலின் போது நீலகிரி தொகுதிக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயமாக நிறைவேற்றுவேன் என பேசினார்.  தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எல்.முருகன், தமிழகத்தில் இன்று கள்ளச்சாராயம் குடித்து ஏற்பட்டுள்ள உயிரிழப்பு தமிழக அரசின் செயலற்ற தன்மையை வெளிப்படையாக காட்டுகிறது என விமர்சித்தார். மேலும் ஆளும் கட்சியின் துணையோடு தான் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக தகவல் வரும் நிலையில் காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின் இன்னும் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பார்வையிடவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.

பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் வாழ்க்கைக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் விற்பனையில் அரசியல்  பாரபட்சம் இன்றி காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் துறை சார்ந்த அமைச்சர் முத்துசாமி தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்பதுடன், இருவரும் பதவி விலக வேண்டும்” என பேசினார்.

Previous Post

கள்ளக்குறிச்சி சம்பவம் :மாதா மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிப்பு..

Next Post

ஓ ஓ.. அப்படியா கதை..வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவியின் மனைவி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓ ஓ.. அப்படியா கதை..வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவியின் மனைவி..!

ஓ ஓ.. அப்படியா கதை..வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயம் ரவியின் மனைவி..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    அட போப்பா எல் முருகா

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In