Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பட்டாசு ஆலையில் திடீர் ஆய்வு; ரோடு ஷோவில் குழந்தைக்கு பெயர் – விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 10, 2024
in அரசியல் செய்திகள்
0
பட்டாசு ஆலையில் திடீர் ஆய்வு; ரோடு ஷோவில் குழந்தைக்கு பெயர் – விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக நேற்று காலை விருதுநகர் வந்தார். மதுரை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக விருதுநகர் வந்த அவருக்கு மாவட்ட எல்லையான சத்திரரெட்டியப்பட்டியில் விருதுநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, வாகனத்தை விட்டு கீழே இறங்கிய முதலமைச்சர், கட்சியினர் கொடுத்த வரவேற்பினை ஏற்றுக்கொண்டதோடு, சிறிது தொலைவு நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதையடுத்து வச்சக்காரப்பட்டி அடுத்த கன்னிச்சேரி புதூரில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டாசு உற்பத்தி மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் பலன்கள் சரிவர உங்களுக்கு கிடைக்கிறதா?, ஆட்சியில் ஏதேனும் குறை உள்ளதா, உங்களின் புகார்களுக்கான தீர்வு அதிகாரிகளால் தரப்படுகிறதா? என கேள்விகள் கேட்டு அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டார்.

ஆய்வு

தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனத்தில் அமர்ந்தபடியே மக்களை சந்தித்து குறைகளை கேட்டார். விருதுநகர் புதிய பேருந்து நிலையம் முதல் ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் மண்டபம் வரை சுமார் 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முதலமைச்சரை சந்தித்த தம்பதியினர், தங்களின் பெண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்குழந்தைக்கு ‘செம்மொழி’ என பெயரிட்டு மகிழ்ந்தார்.

ஆய்வு

தொடர்ந்து ராமமூர்த்தி சாலையில் உள்ள தனியார் மண்டபத்திற்கு வந்தடைந்த அவர், விருதுநகர் மாவட்ட தி.மு.க கழக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இந்த கூட்டத்தில், கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் 2026ம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, பேரூர் ஒன்றிய கிளை கழகங்களை மேலும் வலுப்படுத்தி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக ஆட்சி அமைந்திட பாடுபட வேண்டும் என்பன உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசியதாக கூறப்படுகிறது.

வரவேற்பு

முன்னதாக பட்டாசு தொழிலாளர்களை சந்தித்துவிட்டு திரும்பும் போது பட்டாசு ஆலை நுழைவாயிலில் காத்திருந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மணிகண்டன் என்பவர், முதல்வரிடம் தனி கோரிக்கை மனு அளித்தார். அப்போது பேசிய அவர், ‘நான் ஆசிரியர் பயிற்சி படித்து முடித்துள்ளேன். டெட் தேர்வு உள்பட அரசு பொது தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். அரசு வேலை செய்வதற்கான அனைத்துத் தகுதிகள் இருந்தும் எனக்கு இதுவரை அரசு வேலை கிடைக்கவில்லை. ஆகவே வாழ்வாதாரம் கருதி எனக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். மணிகண்டனின் கோரிக்கையை கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக கூறி புறப்பட்டுச் சென்றார்.

`விளையாட்டு வீரருக்கான அத்தனை திறமைகளும், கலைஞரிடம் இருந்தன; எனவேதான்…’ – துணை முதல்வர் உதயநிதி



.

Previous Post

கடைசிநாள் பிரசார பொதுக்கூட்டம்; மும்பை சிவாஜி பார்க் மைதானத்திற்கு போட்டி போடும் தாக்கரே சகோதரர்கள்!

Next Post

இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?

இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் யார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In