மதுபான கலால் ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோதியா கைது செய்யப்பட்ட வழக்கில், அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையிலும், சில ஆதாரங்களின் அடிப்படையிலும் நீதிமன்றமே இந்த ஊழலில் முகாந்திரம் இருக்கிறது என்று கூறிய அடிப்படையில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு ED நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விசாரணையின் போது கைதுசெய்யப்பட்டால் முதல்வராக யாரை நியமிக்கலாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் உயர்நிலை குழு அவசர ஆலோசனை கூட்டம் நடப்பதாக தகவல். பெரும்பாலானோர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களின் மனைவி சுனிதா தற்காலிக முதல்வராக நியமிக்கப்படலாம் என்று கருத்து தெரிவிப்பதாகவும் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் டெல்லி வட்டாரங்களில் செய்திகள் பரவுகின்றன.
பாஜகா-வின் அழுத்தம் மற்றும் அரசியல் காழ்புணர்ச்சியே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் புலம்புகிறார்கள்.
டெல்லி தலைமை மந்திரி அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா, வருமான வரித் துறையில் கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், இந்திய வருவாய் சேவையிலிருந்து (ஐஆர்எஸ்) VRS ஓய்வு பெற்றுள்ளார்.

