Last Updated:
நாக்பூரில் அவுரங்கசீப்-ன் கல்லறையை அகற்றுவது தொடர்பான போராட்டம் வன்முறையாக மாறி, 15 காவலர்கள் காயம், 12 பேர் கைது. முதல்வர் ஃபட்னாவிஸ் வன்முறையை கண்டித்தார்.
மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் அவுரங்கசீப்-ன் கல்லறையை அகற்றுவது தொடர்பாக எழுந்த போராட்டம், வன்முறையாக வெடித்ததால் பதற்றம் நிலவுகிறது.
வன்முறையின் காரணமாக 3 காவல் அதிகாரிகள் உட்பட 15 காவலர்கள் காயமடைந்ததாகவும், இதனால் 12 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “புனித நூல்கள் எரிக்கப்பட்டதாக வதந்தி பரப்பப்படுவதாகவும், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும்” கூறியுள்ளார்.
“இது திட்டமிடப்பட்ட வன்முறையாக தெரிகிறது” எனக் கூறியுள்ள முதலமைச்சர், “காவல்துறைக்கு எதிரான வன்முறைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது” என்றும், “சட்டத்தை யாரும் கையில் எடுக்கக்கூடாது” என்றும் கூறினார்.
இதையும் படியுங்கள் : “மகா கும்பமேளா மூலம் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டது” – பிரதமர் நரேந்திர மோடி
முன்பாக நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹன்ஸாபுரி உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. கல்லெறிதல் உள்ளிட்ட சம்பவங்களால் பொதுமக்களில் பலர் பலத்த காயமடைந்துள்ளனர். பா.ஜ.கவின் மத அரசியலால் நாக்பூர் பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
March 18, 2025 7:42 PM IST
அவுரங்கசீப் கல்லறையை அகற்ற போராட்டம்.. நாக்பூரில் வன்முறை! எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் ஃபட்னாவிஸ்

