பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல்களை ஒடுக்குகிறது. எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களை நாடாளுமன்றத்திலும் பேச விடுவதில்லை, நீதி ஆயோக் கூட்டத்திலும் பேச விடுவதில்லை.பேசினால் வழக்குகள் பதிவு செய்யப்படும்.
மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பேசவிடாமல் நிறுத்தப்பட்டதால், நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததாகக் கூறினார்.
பாஜக அரசு தொடர்ந்து எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதிலும், அவர்களின் குரலை தொடர்ந்து ஒடுக்குவதிலும் குறியாக இருப்பதையே இந்தச் சம்பவம் காட்டுகிறது என்றார். “ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேச விரும்பும் ஒரு முதல்வரை ஏன் நீதி ஆயோக் கூட்டத்தில் பேச அனுமதிக்க முடியாது,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது நடத்தப்பட்ட தேசிய வளர்ச்சி கவுன்சில் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தில், அப்போது இதே பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த போது 15 முதல் 25 நிமிடங்கள் வரை எப்படிப் பேசினார், அப்போது ஒரு குறுக்கிடோ அல்லது பேசவிடாமல் நிறுத்தப்பட்டவோ இல்லை என சிதம்பரம் கூறினார்.
