தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே சார்மினார் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னையில் இருந்து ஐதராபாத் சென்ற சார்மினார் விரைவு ரயில் நம்பள்ளி ரயில்நிலையம் அருகே தடம் புரண்டுவிபத்துக்குள்ளானது. சாதாரண வகுப்பு படுக்கை வசதியுடைய S2,S3,S6 உட்பட 6 பெட்டிகள் தடம் புரண்டன. விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
இதேபோல் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே இன்ஜின் தடம் புரண்டது. சேத்துப்பட்டு ரயில் பணிமனையில் இருந்த பெட்டிகளை இழுத்து செல்ல வந்த இன்ஜின் எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தடம் புரண்ட ரயில் இன்ஜினை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய 3 சக்கரங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

