முதலமைச்சர் கோப்பை 2023 – மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கல்லூரி மாணவிகள் பிரிவு கூடைப்பந்து போட்டியில் முதலிடம் வென்ற சென்னை அணியினருக்கு ரூ.6 லட்சம் பரிசுத்தொகை, பதக்கங்கள் & சான்றிதழ்களை இன்று வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இப்போட்டியில் 2 ஆவது இடம்பிடித்த செங்கல்பட்டு அணிக்கு ரூ. 4.50 லட்சம், 3-ஆம் இடம் வென்ற கோவை அணி வீராங்கனைகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கினார்.. வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.




