Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை மெட்ரோ கட்டுமானப் பணியில் விபத்து: ஒருவர் பலி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 13, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை மெட்ரோ கட்டுமானப் பணியில் விபத்து: ஒருவர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது தண்டவாள டிராக் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது தண்டவாளம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால், ராமாபுரம் – பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் இருந்து பூந்தமல்லியை இணைக்கும் வகையில் மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கத்திபாரா மேம்பாலத்தில் இருந்து ராமாபுரம் – போரூர் – அய்யப்பன்தாங்கல் வழியாக பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தூண்கள் அமைக்கப்பட்டு, அதனை இணைக்கும் வகையில் தண்டவாளப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, ராமாபுரத்தில் உள்ள டி.எல்.எஃப் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் எல்&டி நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் தண்டவாள டிராக் விழுந்து இன்று விபத்துக்குள்ளானது.

20 அடி உயரத்தில் இருந்து தண்டவாளம் சரிந்து விழுந்ததில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்று மாலை முதலே பரவலாக மழை பெய்த நிலையில், ராமாபுரம் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி! டாடா குழுமம்



.

Previous Post

Sowmiya-வை அட்டாக் செய்யும் Ramadoss, 3 ஆண்டு ப்ளாஷ்பேக், Anbumani ஷாக்! | Elangovan Explains

Next Post

தலைப்பு செய்திகள்: சென்னை மெட்ரோ விபத்து முதல் ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வு வரை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தலைப்பு செய்திகள்: சென்னை மெட்ரோ விபத்து முதல் ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வு வரை!

தலைப்பு செய்திகள்: சென்னை மெட்ரோ விபத்து முதல் ராஜ்யசபா எம்பிக்கள் தேர்வு வரை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In