தனது இல்லத்தில் நடைபெற்ற கணபதி பூஜையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது சர்ச்சையான நிலையில் ஓய்வுபெறுவதற்கு ஒருநாள் முன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இதுபோன்ற சந்திப்புகளின்போது, நீதித் துறை தொடர்பான விஷயங்கள் ஆலோசிக்கப்படாது என்று அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மாநில முதல்வர்களும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் அவ்வப்போது சந்தித்து பல விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பது நடைமுறையில் உள்ளது என்றார்.
