Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு – சந்திரபாபு நாயுடு மேல் உள்ள வழக்குகள்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 8, 2024
in Default
0
அமித்ஷாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு – சந்திரபாபு நாயுடு மேல் உள்ள வழக்குகள்?
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, ரூ.371 கோடி திறன் மேம்பாட்டு நிதி மோசடி வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த நவம்பர் 20ல் ஆந்திர மாநில ஐகோர்ட் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கியது. இதனிடையே தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) ரத்து செய்யக்கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை ஆந்திர ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மேல்முறையீடு செய்திருந்தார். இந்த சூழலில் அமித்ஷா அவர்களை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துவிடுவோம் என்பதில் உறுதியாக இருக்கிறது. என்றாலும் எதிர்க்கட்சிகள் பலம் அடைந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக உள்ளது. இதனால் பா.ஜனதா எங்கெல்லாம் வலுவாக இல்லையோ அங்கெல்லாம் கூட்டணி அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த அடிப்படையில் தான் பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தை தனது கூட்டணியில் சேர்த்தது.இதன் அடிப்படையில் ஆந்திராவிலும் தனது கூட்டணியை வலுப்படுத்த பா.ஜனதா தலைவர்கள் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியுடன் நடத்தி வந்த பேச்சுவார்த்தை இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டாவும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தெலுங்கு தேசம் இருந்தது. அந்த தேர்தலில் தெலுங்குதேசம் 16 தொகுதிகளிலும், பா.ஜனதா கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தன.

பின்னர் பா.ஜனதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019 நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் தனித்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 3 -ல் மட்டுமே அந்த கட்சியால் வெற்றி பெற முடிந்தது. மீதியுள்ள 22 தொகுதிகளையும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது. அத்துடன் சட்டசபை தேர்தலிலும் சந்திரபாபுநாயுடு தோல்வியுற்று ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஆட்சியை பறிகொடுத்தார்.25 தொகுதியில் போட்டியிட்ட ஜெகன் 49.89 சதவீத ஓட்டுகளையும், சந்திரபாபுநாயுடு 40.19 சதவீத ஓட்டுகளையும் பெற்றனர். 25 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜனதா ஒரு சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பரிதாபமாக காட்சி அளித்தது. புதிய கட்சியான பவன்கல்யாணின் ஜனசேனா 5.87 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்குதேசம், ஜனசேனா, பா.ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் சந்திரபாபு நாயுடு- அமித்ஷா சந்திப்பு நடந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திராவில் ஆளும் கட்சியாக இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுடன் இணக்கமாகவே இருந்து வந்தது. இதனால் மவுனம் காத்து வந்து பா.ஜனதா தேர்தல் நெருங்கும் சூழலில் தெலுங்கு தேசத்துடன் தேர்தல் கூட்டணியை உறுதி செய்ய இறுதி கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்திலும் பா.ஜனதா போதிய வலுவுடன் இல்லை. ஆகவே அங்கு மீண்டும் அகாலிதளத்துடன் கூட்டணி அமைக்க பா.ஜனதா பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Previous Post

9 லட்சம் கோடி சொத்து மதிப்பு : உலகின் 12-வது பணக்காரராக உயர்ந்தார் அதானி..

Next Post

ஒரு வாரமாகப் பாலியல் வன்கொடுமை; சூடான பருப்பை உடலில் ஊற்றி சித்ரவதை! – இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒரு வாரமாகப் பாலியல் வன்கொடுமை; சூடான பருப்பை உடலில் ஊற்றி சித்ரவதை! – இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..

ஒரு வாரமாகப் பாலியல் வன்கொடுமை; சூடான பருப்பை உடலில் ஊற்றி சித்ரவதை! - இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In