Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 15, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
12
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் தமிழக பகுதிகளின் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும், (அக். 15, 16) சில இடங்களிலும், வரும் 17, 18-ம் தேதிகளில்ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 19, 20-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 17-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 18-ம் தேதி கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

அக். 14-ம் தேதி (நேற்று) காலை8 மணியுடன் நிறைவடைந்த 24மணி நேரத்தில் பதிவான மழைஅளவுகளின்படி தேனி மாவட்டம் தேக்கடியில் 10 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் களியலில் 8 செ.மீ., திற்பரப்பு, பேச்சிப்பாறையில் 6 செ.மீ., புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, மீமிசல், தென்காசி ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Tags: இனறகனமழபயயமவடடஙகளலவயபப
Previous Post

“சந்திர பிரியங்கா குற்றச்சாட்டுகளை பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் விசாரிக்க வேண்டும்” – நாராயணசாமி

Next Post

அண்ணா, கருணாநிதி ஆட்சியில் மகளிர் முன்னேற்றம்: திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி புகழாரம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அண்ணா, கருணாநிதி ஆட்சியில் மகளிர் முன்னேற்றம்: திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி புகழாரம்

அண்ணா, கருணாநிதி ஆட்சியில் மகளிர் முன்னேற்றம்: திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி புகழாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In