புதுடில்லி: ‛‛கொரோனா குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பீதி அடைய தேவையில்லை” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், டில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பீதி அடையாதீங்க
பின்னர் மன்சுக் மாண்டவியா கூறியிருப்பதாவது: கொரோனா குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பீதியடைய தேவையில்லை. மருத்துவமனைகள் தயாராக இருக்க வேண்டும். கண்காணிப்பை தீவிரப்படுத்தி அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பில் மாநிலங்களுக்கு அனைத்து உதவிகளும் மத்திய அரசு வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

