Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 19, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கூகுள் குரோம் பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசின் கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகளவில் நடைபெறும் இணைய மோசடிகள் மற்றும் ஹேக் செய்யப்படும் முறைகள் குறித்து கண்காணித்து இந்திய மக்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை வெளியிடும் அமைப்பு மத்திய அரசின் இந்திய கணினி அவசரநிலை கண்காணிப்புக் குழு. (Indian Computer Emergency Response Team – CERT-In)

இந்த குழு அளிக்கும் அப்டேட்களை தொடர்ந்து பின்பற்றினால் பெருமளவிலான இணைய மோசடிகளில் இருந்து தப்பித்துவிடலாம்.

இந்த நிலையில், கூகுள் குரோம் செயலியை விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் பயன்படுத்துபவர்களுக்கு இந்தக் குழு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூகுள் குரோம் செயலியை கணினியில் பயன்படுத்துபவர்களை குறிவைத்து உலகளவில் தாக்குதல் நடைபெறுவதாகவும், தாக்குதலுக்கு சமரசமானால் கணினியில் உள்ள அனைத்து தரவுகளையும் இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செல்போன்களில் கூகுள் குரோம் செயலியை பயன்படுத்துபவர்களுக்கு பெரிதளவிலான பாதிப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

சிஐவிஎன் – 2025 – 0099 (CIVN – 2025 – 0099) என்ற சைபர் தாக்குதலை கூகுள் குரோம் செயலி தற்போது சந்தித்து வருகின்றது. விண்டோஸ் மற்றும் மேக் கம்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் கூகுளின் முந்தைய வெர்சனான 136.0.7103.113/.114, லினெக்ஸ் கம்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் வெர்சன் 136.0.7103.113 ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

ஆகையால், இந்த வெர்சனை வைத்திருப்பவர்கள் தாக்குதலில் இருந்து தப்பிக்க அப்டேட் வெர்சனை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கணினிக்கு தேவையான பாதுகாப்பு செயலிகளையும் பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.



.

Previous Post

திருப்பத்தூர்: விகடன் செய்தி எதிரொலி; சிதிலமடைந்த பேருந்து நிழற்குடை சீரமைப்பு! | bus stop in tirupattur has been renovated after vikatan news

Next Post

‘பெருமழையால் பாதிக்கப்பட்ட பெங்களூரு.. நீண்ட காலப் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்’: டி.கே.சிவக்குமார் உறுதி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘பெருமழையால் பாதிக்கப்பட்ட பெங்களூரு.. நீண்ட காலப் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்’: டி.கே.சிவக்குமார் உறுதி!

'பெருமழையால் பாதிக்கப்பட்ட பெங்களூரு.. நீண்ட காலப் பிரச்னைக்கு தீர்வு காண்பேன்’: டி.கே.சிவக்குமார் உறுதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In