கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. மேலும், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடுமையான தலைவலி, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு 50க்கும் அதிகமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 14 பேர் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது? என்பது பற்றியும், வழக்கு விசாரணை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
