Tuesday, September 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கலங்கும் கந்தர்வக்கோட்டை..! – தலித்துகள் மீது கற்களை வீசிய சாதிவெறியர்கள் – விசிக புகார்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 3, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கலங்கும் கந்தர்வக்கோட்டை..! – தலித்துகள் மீது கற்களை வீசிய சாதிவெறியர்கள் – விசிக புகார்..!
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: கந்தர்வக்கோட்டையில் கோயில் திருவிழாவில் பங்கேற்க சென்ற பட்டியலின மக்களை தடுத்து கற்களை வீசி தாக்கிய ஆதிக்க சாதியினர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்றும் நோக்கில் அதிகாரிகள் நடந்துகொள்வதாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தெரிவித்து உள்ளார்.

வன்னியரசு ட்வீட்: இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, “தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் மதிப்புமிகு சங்கர் ஜிவால் அவர்களின் கவனத்திற்கு. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா புதுநகர் சரகம் வீரடிப்பட்டி கிராமத்தில் கடந்த ஆகஸ்டு 28, 2023 அன்று காளியம்மன் கோவில் திருவிழா நடைப்பெற்றது.

அவ்விழாவில் ஆதிதிராவிட மக்கள் முளைப்பாரி எடுத்து வரும் போது, சாதி இந்துக்கள் மின்சாரத்தை நிறுத்தி விட்டு, கற்களை வீசித்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதுகுறித்து கந்தர்வக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இன்று வரை சாதியவாதிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

அதிகாரிகள் ஆதரவு: அதனால், தினமும் ஆதிதிராவிட மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், சாதியவாதிகளின் போக்கு தொடர்கிறது. வருவாய்த்துறை அதிகாரிகளும் கடந்த ஒரு மாத காலமாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகளின் போக்கு சாதியவாதிகளை பாதுகாப்பதாக இருக்கிறது என சொல்லி ஆதிதிராவிட மக்கள் அமைதிப் பேச்சுவார்த்தை நாடகத்தை புறக்கணித்துள்ளனர்.

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்
மதிப்புமிகு@tnpoliceoffl அவர்களின் கவனத்திற்கு…..

புதுக்கோட்டை மாவட்டம்
கந்தர்வக்கோட்டை தாலுகா
புதுநகர் சரகம்
வீரடிப்பட்டி கிராமத்தில்
கடந்த ஆகஸ்டு 28, 2023 அன்று காளியம்மன் கோவில் திருவிழா நடைப்பெற்றது.
அவ்விழாவில் ஆதிதிராவிட மக்கள்… pic.twitter.com/1pJ26e92cN

— வன்னி அரசு (@VanniKural) October 3, 2023

வருவாய்த்துறை அதிகாரிகள் பிரச்சனை சுமூகமாக முடிந்ததாக பொய்யான கதை எழுதி ‘பைலை’ மூடிவிட்டனர். காவல்துறையும்
வருவாய்த்துறையும் சாதியவாதிகளுக்கு பாதுகாப்பாக இருப்பதிலேயே கவனமாக இருக்கிறது. தினமும் ஆதிதிராவிட மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் சாதியவாதிகளை கைது செய்ய வேண்டும். கந்தர்வக்கோட்டை பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

வழக்கு விபரம்: கந்தவர்க்கோட்டை காவல் நிலையத்தில் கந்தர்வக்கோட்டையை அடுத்த மட்டங்கால், வீரடிப்பட்டிடை கிராமத்தை சேர்ந்த நடேசன் என்பவரது மகன் குமார் புகார் மனு அளித்தார். அதில், “அதிதிராவிடர் மக்கள் கோவில் திருவிழாவில் மின் இணைப்பைத் துண்டித்தும்,கல் வீசி சாதிப்பெயரை இழிவாக சொல்லி பேசியவர்களை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தல் தொடர்பாக.

அய்யா, நாங்கள் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறோம் நேற்று 20/08/2023 தேதியில் இரவு 8.30 மணிக்கு எங்கள் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் மது எடுத்து மாவிளக்கு பூஜை நடைப்பெற்றது. எங்களுக்கு கந்தர்வக்கோட்டை காவல்துறை அனுமதியோடும், பாதுகாப்போடும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

அப்போது ஆதிக்க சாதியினர் எங்களை உங்களுக்கு சாமி கும்பிட என்னடா அருகதை இருக்கு என்று ஜாதி பெயரை சொல்லி சுலவயும் செய்தவர்களை கைது செய்ய வேண்டுமாறு மிக பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டு உள்ளார். அதன் பேரில் ,”இளவரசன், ரெங்கராசு, ஜெகநாதன், அய்யனார், ஐங்கரன் ஆகியோர் மீது 421/2023 U/S 147,336 IPC r/w 3(1)(r),3(1)(s), 3(1)(za){c),3(2)(Va) of SC/ST (POA) Act 1989-ன் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Previous Post

அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கும் – பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உறுதி

Next Post

திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது – சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது – சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.!

திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது - சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In