தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதிப் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்துத் தெரிவித்துள்ளார்.
கல்வராயன் மலை மேம்பாட்டுத் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் கருத்து தெரிவித்துள்ளார். தாமே முன்வந்து எடுத்த இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
