லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினரின் சொத்துக்களைத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அனுபவித்தாலோ அல்லது கையாண்டாலோ அது குற்றமாகக் கருதப்படும் என்றும் கனடா அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து கனடா அரசு வெளியிட்டுள்ள செய்தியில், “‘தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு கனடாவில் இடமில்லை” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னதாக லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் கனடா மக்களையும் மிரட்டி பணம் பறிப்பதாகவும், அரசியல், மத காரணங்களுக்காகச் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், கனடா மற்றும் வெளிநாடுகளில் செய்த குற்றச்செயல்களை அவர்களே ஒப்புக்கொண்டு இருப்பதால் அவர்களை தீவிரவாதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு எம்.பி பிராங்க் கோரிக்கை விடுத்து இருந்தார்.
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் நிஜ்ஜார் கடந்த 2023ம் ஆண்டு கொலை செய்யப்பட்டபிறகுதான் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் குறித்து சர்வதேச அளவில் தெரிய வந்தது. இந்தியாவில் பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலா, மும்பையில் நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பர் பாபாசித்திக் ஆகியோரை லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் சுட்டுக்கொன்றது.
அதோடு சல்மான் கான் வீட்டின் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். ஆனால் அவரது ஆட்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர்.
