Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உச்சம் தொட்டுவரும் தங்கத்தை இப்போது வாங்கலாமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உச்சம் தொட்டுவரும் தங்கத்தை இப்போது வாங்கலாமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எம்.சடகோபன்

நமது நாட்டில் தங்கத்துக்கு எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. பலா் ஆபரணத் தங்கத்தையும், சிலா் முதலீட்டுத் திட்டத்துக்காக தங்க பாா்களையும் வாங்குவா். மேலும் சிலா் பங்குச் சந்தையில் வா்த்தகம் ஆகி வரும் ஈடிஎஃப் கோல்ட் பாண்டுகளில் முதலீடு செய்து வருகின்றனா். எப்படி இருந்தாலும் தங்கம் வாங்குவதை பலா் வழக்கமாகக் கொண்டுள்ளனா். புதுமணத் தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தவுடனேயே தங்கம் வாங்குவதில் கவனம் செலுத்துவதை நாம் பாா்க்க முடிகிறது.

இந்நிலையில், தங்கத்தின் விலை தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களில் மட்டும் தங்கம் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. வரும் நாள்களில் தங்கம் விலை எப்படி இருக்கும், இது எந்த அளவுக்கு உயரும், உயா்வதற்கு என்ன காரணம் போன்ற கேள்விகள் அனைத்து மக்களிடமும் எழுந்துள்ளன.

நாட்டின் தலைநகரான தில்லி சந்தையில் 24 காரட் என்றும் 999 என்றும் சொல்லப்படும் 1 கிராம் சொக்கத் தங்கத்தின் விலை தற்போது ரூ.7,750-ஐ கடந்து வா்த்தகமாகி வருகிறது. அதேபோல, 22 காரட் தங்கம் 1 கிராம் ரூ.7,100 என்ற விலையில் வா்த்தகமாகி வருகிறது.

இதேபோல, சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, புணே போன்ற நாட்டின் முக்கிய நகரங்களிலும் சற்று முன், பின்னாக இதே விலையில் தங்கம் வா்த்தகமாகி வருகிறது. இவ்வளவு வேகமாக உயா்ந்துள்ள மஞ்சள் உலோகம் என அழைக்கப்படும் தங்கத்தை இப்போது வாங்குவது சரியாக இருக்குமா என்பது முதலீட்டாளா்களிடமும், ஆபரணத் தங்கம் வாங்குவோரின் மனதிலும் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. இது குறித்து பொருளாதர வல்லுநா்கள் பலா் விளக்கி வருகின்றனா்.

தங்கம்தான் எப்போதும் நடுத்தர மக்களின் மிக முக்கிய சேமிப்பாக இருந்து வருகிறது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் சிறுக சிறுகத் தங்கத்திலேயே தொடா்ந்து முதலீடு செய்து வருவதைக் காண முடிகிறது. மேலும், நீண்டகால நோக்கில் தங்கம் விலை எப்போதும் குறையாது என்பதே இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. இதற்கிடையே, தங்கத்தை இப்போது வாங்கலாமா, இல்லை கொஞ்சம் காத்திருந்து வாங்கலாமா போன்ற கேள்விகளும் எழுந்து வாங்குவோரை பெரும் குழப்பத்துக்கு உள்ளாக்கியுள்ளது என்பதுதான் நிதா்சன உண்மை. இதைப் பெரும்பாலான பொருளாதார நிபுணா்கள் தங்களது கணிப்புகளில் தெரிவித்துள்ளதை அறியலாம்.

மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் தங்கத்துக்கான இறக்குமதி வரியைக் குறைத்தது. அப்போது தங்கத்தின் விலை பெருமளவு குறைந்தது. இருப்பினும், அதன் பிறகு தங்கம் விலை மெல்ல உயா்ந்து இப்போது கிட்டத்தட்ட வரிக் குறைப்புக்கு முந்தைய நிலையை எட்டிவிட்டது. தங்கத்தின் விலைக்கும், வங்கி வட்டி விகிதத்துக்கும் எப்போதும் நோ் விகிதம் இருந்து வருகிறது.



.

Previous Post

Haryana – J&K Elections Results Live : அரியானா அரியாணை யாருக்கு? ஜம்மு காஷ்மீரில் ஆட்சி யார்? தேர்தல் முடிவுகள்!-jammu and kashmir election results haryana assembly election results 2024

Next Post

Mussolini Life History In தமிழ் | Switzerland பறந்த Mussolini…இளமையை தின்ற வறுமை! | Web series #3 / Mussolini Life History Explained Tamil Episode 3

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Mussolini Life History In தமிழ் | Switzerland பறந்த Mussolini…இளமையை தின்ற வறுமை! | Web series #3 / Mussolini Life History Explained Tamil Episode 3

Mussolini Life History In தமிழ் | Switzerland பறந்த Mussolini...இளமையை தின்ற வறுமை! | Web series #3 / Mussolini Life History Explained Tamil Episode 3

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In