2016 – 2022-ம் ஆண்டு, தமிழ்நாடு பொது சுகாதார கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவை துறை பராமரிப்பு பற்றிய இந்திய தலைமை தணிக்கையகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
தமிழ்நாடு மாநில சுகாதார துறையில் குடும்ப நல அசிஸ்டன்ட் மற்றும் பயிற்சியாளர், பெண் சுகாதார ஆய்வாளர் (Women Health Visitor), மகப்பேறு குழந்தைகள் நல அலுவலர் உள்ளிட்ட பணிகளில் 75 சதவிகித காலிபணியிடங்கள் உள்ளன.
இரண்டாம் நிலை சுகாதார மையங்களில் தேவைக்கு குறைவாகவே மருத்துவ மற்றும் துணை மருத்துவ ஊழியர்கள் உள்ளனர். ஆரம்ப சுகாதார மையங்களில் டாக்டர் மற்றும் நர்ஸ் பணிகளுக்கு பெருமளவு காலி பணியிடங்கள் உள்ளது.
