Last Updated:
2025 பட்ஜெட்டை தொடர்ந்து, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஸ்லீப்பர் மற்றும் சேர் கார் ஆப்ஷன்ஸ் உட்பட 100 அம்ரித் பாரத், 50 நமோ பாரத் மற்றும் 200 வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
நாட்டில் மத்திய பட்ஜெட் மீதான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேலும் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2025 பட்ஜெட்டை தொடர்ந்து, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஸ்லீப்பர் மற்றும் சேர் கார் ஆப்ஷன்ஸ் உட்பட 100 அம்ரித் பாரத், 50 நமோ பாரத் மற்றும் 200 வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த புதிய ரயில்கள் நாடு முழுவதும் இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தி பைனான்சியல் எக்ஸ்பிரஸின்படி, 2025-26 பட்ஜெட்டில் இந்திய ரயில்வேக்கு ரூ.2.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 17500 ஏசி அல்லது சாதாரண பெட்டிகள், 200 வந்தே பாரத் மற்றும் 100 அம்ரித் பாரத் ரயில்கள் போன்ற திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ரயில் பவனில் செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவ் , ரயில்வேக்கு ஒதுக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் எதிர்கால செலவுகள் குறித்த தகவல்களை தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, பட்ஜெட்டில் ரூ.4.6 லட்சம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அவை நான்கைந்து ஆண்டுகளில் முடிக்கப்படும். இதில் புதிய ரயில் பாதைகள் அமைத்தல், ஏற்கனவே உள்ள ரயில் பாதைகளை இரட்டிப்பாக்குதல், ரயில் நிலையங்களை மறுசீரமைத்தல் மற்றும் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளை மறுவடிவமைப்பு செய்தல் ஆகியவை அடங்கும்.
ரயில் பயணத்திற்கான தேவை அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 100 அம்ரித் பாரத், 50 நமோ பாரத் மற்றும் 200 வந்தே பாரத் ரயில்கள் உருவாக்கப்படும் என்றும் கூறினார். புதிய அமிர்த் பாரத் ரயில்கள் மூலம், பல நகரங்களை குறுகிய தூரத்தில் இணைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர், சாதாரண பெட்டிகள் தயாரிப்பு ஏற்கனவே நடந்து வருகிறது என்றும், மார்ச் 31 இறுதிக்குள், 1,400 பெட்டிகள் தயாராக இருக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், அடுத்த நிதியாண்டில் 2,000 சாதாரண பெட்டிகள் தயாரிப்பதே எங்களது இலக்கு. இதனுடன் 1,000 புதிய மேம்பாலங்கள் கட்டவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: PM – Kisan scheme | PM – Kisan திட்டம் அப்டேட்: 19வது தவணை நிதி வெளியாகும் தேதி என்ன தெரியுமா…?
ரயில்வே பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்த வைஷ்ணவ், அதற்கான ஒதுக்கீட்டை ரூ.1.08 லட்சம் கோடியில் இருந்து ரூ.1.14 லட்சம் கோடியாக உயர்த்தி, அடுத்த நிதியாண்டில் ரூ.1.16 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்றார். 2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் சரக்கு போக்குவரத்து தொடர்பான முக்கிய சாதனையை ரயில்வே எட்டப் போகிறது என்றார். மார்ச் 31ஆம் தேதிக்குள் 1.6 பில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் செல்லும் இலக்கை எட்டுவோம் என்றும், சரக்கு போக்குவரத்தில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய ரயில்வே 2வது இடத்தைப் பிடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
February 05, 2025 2:47 PM IST
2026க்குள் 17,500 சாதாரண பெட்டிகள், 200 வந்தே பாரத் ரயில்கள், 100 அம்ரித் பாரத் ரயில்களை அறிமுகப்படுத்த திட்டம்…!


