வழித் தடங்கள் விவரம்: பேருந்து முனையத்திலிருந்து சென்று வரும் விரைவுப் பேருந்துகள், புகரப் பேருந்துகளுக்கான வழித்தட விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, சென்னை, திருப்பதி, வேலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி மாா்க்கப் பேருந்துகள் திருச்சி நோக்கி உள்வரும்போது நெ.1 டோல்கேட், பழைய பால்பண்ணை, மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூா் பேருந்து முனையத்துக்குச் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழியாக திரும்பச் செல்ல வேண்டும்.
தஞ்சாவூா் மாா்க்கப் பேருந்துகள் திருச்சி நோக்கி உள்வரும்போது பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் முனையத்துக்குச் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும்.
நாமக்கல் மாா்க்கப் பேருந்துகள் பழைய பால்பண்ணை, டிவிஎஸ் டோல்கேட், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் பேருந்து முனையத்துக்குச் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழியில் திரும்பிச் செல்ல வேண்டும்.
புதுக்கோட்டை மாா்க்கப் பேருந்துகள் டிவிஎஸ் டோல்கேட், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் பேருந்து முனையம் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.
கரூா் மாா்க்கப் பேருந்துகள் மாவட்ட நீதிமன்றம், ஆட்சியா் அலுவலகம், வ.உ.சி சாலை, மத்திய பேருந்துநிலையம், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் முனையம் செல்ல வேண்டும். மீண்டும், இதே வழித்தடத்தில் திரும்பச் செல்லவேண்டும்.
மணப்பாறை மாா்க்கப் பேருந்துகள் திருச்சி நோக்கி உள்வரும்போது கருமண்டபம், மன்னாா்புரம் ரவுண்டானா வழியாக பஞ்சப்பூா் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.
மதுரை மாா்க்கப் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையிலேயே பஞ்சப்பூா் வழியாக பேருந்து முனையம் செல்ல வேண்டும். மீண்டும் இதே வழித்தடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும்.
நகரப் பேருந்துகள் இயக்கம்: மத்தியப் பேருந்து நிலையம் வரும் அனைத்து நகரப் பேருந்துகளும் மன்னாா்புரம் வழியாக பஞ்சப்பூா் வந்து செல்ல வேண்டும். அனைத்து பேருந்துகளும் பேருந்து முனையத்துக்கு உள்வரும்போது காவல் சோதனை சாவடி எண்.2 வழியாக சென்று பேருந்து முனையத்தின் பின்வழியாக உள்ளே வரவேண்டும். பேருந்து முனையத்திலிருந்து வெளிச்செல்லும் அனைத்துப் பேருந்துகளும் (மதுரை மாா்க்கம் தவிா்த்து) தேசிய நெடுஞ்சாலை வழியாக பஞ்சப்பூா் சந்திப்பு வரை சென்று திரும்பி செல்ல வேண்டும்.
ஆம்னி பேருந்துகளுக்கு தனி இடம்
பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடியில் புதிதாக ஆம்னி பேருந்து கட்டி முடிக்கப்படும் வரையில், தற்போதுள்ள புதிய பேருந்து முனையத்துக்கு அருகிலேயே தற்காலிகமாக காலி இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான் ஆம்னி பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும். மத்திய பேருந்து நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் ஒப்பந்த ஊா்தி ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது. பஞ்சப்பூா் முனையத்துக்கு அருகில் தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே ஆம்னி பேருந்துகள் இனி இயங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
