Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“கோவில்களில் நூலகம் கட்டுங்கள்” – ISRO சோம்நாத்; அப்ப பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் எதற்கு? நேட்டீசன்கள் கலாய்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 18, 2024
in Default
1
“கோவில்களில் நூலகம் கட்டுங்கள்” – ISRO சோம்நாத்; அப்ப பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் எதற்கு? நேட்டீசன்கள் கலாய்..!
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

’கோயில்கள் என்பவை வயதானவர்களுக்கு மட்டுமானவை என்றில்லாது, இளைஞர்களை ஈர்க்கும் இடமாகவும் மாற வேண்டும்’ என்று ஆலோசனை பகிர்ந்திருக்கும் இஸ்ரோ தலைவர் சோமநாத், அதற்கான முன்னோடி யோசனை ஒன்றையும் முன்வைத்திருக்கிறார்.

”ஆன்மிக தலங்கள் என்பவை முதியோர்கள் மட்டுமே இறைவன் நாமத்தை உச்சரிக்கும் இடமாக இருப்பதை மாற்றி, சமுதாயத்தை மாற்றும் இடமாகவும், இளைஞர்களை ஈர்க்கும் இடமாகவும் அமைய வேண்டும்” என்று இஸ்ரோ அமைப்பின் தலைவர் எஸ்.சோம்நாத் வலியுறுத்தி உள்ளார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இன்றைய தினம் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீஉதியன்னூர் தேவி கோவிலின் விழா ஒன்றில் பங்கேற்று, அங்கே தனக்கான விருதை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயரிடம் இருந்து சோம்நாத் பெற்றார். தொடர்ந்து விழா மேடையில் அவர் பேசுகையில் இந்த ஆலோசனையை வழங்கினார்.

தற்காலத் தலைமுறையினர் மத்தியில் கோயில்கள் என்பவை முதியோருக்கான இடமாக இருப்பதையும், இளம் வயதினர் மத்தியில் கோயில்களுக்கு செல்லும் போக்கு குறைந்து வருவதையும் விவாதத்துக்கு உள்ளாக்கும் வகையில் இஸ்ரோ தலைவரின் இன்றைய கருத்து அமைந்துள்ளது.

‘நாடு முழுவதும் உள்ள கோயில்களின் நிர்வாகங்கள் இளைஞர்களை ஆன்மிக தலங்களுக்கு ஈர்க்கும் வகையில் செயல்பட வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார். அதன்பொருட்டு தன் பங்குக்கு யோசனை ஒன்றையும் அந்த விழா மேடையில் சோம்நாத் பதிவு செய்தார்.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

இஸ்ரோ தலைவர் சோம்நாத்

“இந்த விருது வழங்கும் விழாவுக்கு இளைஞர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் அவர்களின் எண்ணிக்கை ஏனோ கணிசமாகக் குறைந்திருக்கிறது. இளைஞர்களை கோவில்களுக்கு ஈர்க்கும் வகையில் கோவில் நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். இதன்பொருட்டு கோவில்களில் நூலகங்களை அமைக்க அவர்கள் ஏன் முன்வரக்கூடாது?” என சோம்நாத் கேள்வி எழுப்பினார்.

’இதுபோன்ற முயற்சிகள் இளைஞர்களை கோயில்களுக்கு ஈர்க்கவும், மாலை மற்றும் ஓய்வு நேரங்களில் பல்வேறு விஷயங்களைப் பற்றி வாசிக்கவும் விவாதிக்கவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவும்’ என்று சோம் நாத் நம்பிக்கை தெரிவித்தார். “கோயில் நிர்வாகங்கள் அதற்கான திசையில் செயல்பட்டால், அது பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும்” என்று அவர் கூறினார்.

நூல்களை படிப்பதற்காக தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமம் வாரியாக நூலகங்கள் உள்ளது.. கோவில்களில் நூலகங்கள் உருவாக்கி முற்காலத்து குருகுல முறையை திரும்ப கொண்டுவர ஏன் ஆசைப்படுகிறீர்கள்? அதற்குத்தானே தனியாக பள்ளிகள், நூலகங்கள் உள்ளன என்று நேட்டீசங்கள் கலாய்த்தவண்ணம் உள்ளனர்.

Previous Post

மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

Next Post

சென்னை மெட்ரோ அசத்தல் அறிவிப்பு..! – இந்த தொகைல ஒருநாள் முழுவதும் பயணிக்கலாமா? வாவ்…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை மெட்ரோ அசத்தல் அறிவிப்பு..! – இந்த தொகைல ஒருநாள் முழுவதும் பயணிக்கலாமா? வாவ்…

சென்னை மெட்ரோ அசத்தல் அறிவிப்பு..! - இந்த தொகைல ஒருநாள் முழுவதும் பயணிக்கலாமா? வாவ்...

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    சோம்நாத் அவர்களின் பேச்சு ஏற்றுக் கொள்ள முடியாதது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In