Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பட்ஜெட் எதிரொலி! உடனடியாக விலை குறையும் பொருட்கள் என்ன? விலை உயரும் பொருட்கள் எது?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 1, 2025
in அரசியல் செய்திகள்
1
பட்ஜெட் எதிரொலி! உடனடியாக விலை குறையும் பொருட்கள் என்ன? விலை உயரும் பொருட்கள் எது?
76
SHARES
122
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புற்றுநோய் மற்றும் அரிதான நோய்களுக்கான 36 மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

பட்ஜெட் கூட்டத் தொடர்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 ஆம் தேதி வரையும், பின்னர் மார்ச் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரையும் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இனிப்பு கலந்த தயிரை ஊட்டிய ஜனாதிபதி

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், நிர்மலா சீதாராமன் மற்றும் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி ஆகியோர் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்தனர். ஜனாதிபதி திரௌபதி முர்மு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ருக்கு ‘இனிப்பு கலந்த தயிரை’ ஊட்டி வாழ்த்து தெரிவித்தார்.

நிதியமைச்சராக பொறுப்பேற்று நிர்மலா சீதாராமன் 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், விவசாயம், உற்பத்தி, வேலை வாய்ப்பு, சிறு குறு நடுத்தரத் தொழில்கள், கிராமப்புற மேம்பாடு, புத்தாக்கம் உள்ளிட்டவைகளில் அரசு கவனம் செலுத்தும் என நிர்மலா சீதாராமன் கூறினார். ”இந்த பட்ஜெட் சீர்திருத்தங்களை செய்வதை நோக்கமாக கொண்டு உள்ளது” என்று கூறினார்.

விலை குறையும் பொருட்கள்

  • புற்றுநோய் மற்றும் அரிதான நோய்களுக்கான 36 மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு.
  • 37 மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி விலக்கு.
  • கோபால்ட் தயாரிப்பு, எல்இடி, துத்தநாகம், லித்தியம் அயன் பேட்டரி ஸ்கிராப் மற்றும் 12 முக்கியமான தாதுப்பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து முழு விலக்கு.
  • 10 ஆண்டுகளுக்கு கப்பல்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி விலக்கு.
  • மீன் பாஸ்டுரி மீதான அடிப்படை சுங்க வரி 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும்.
  • கைவினைப் பொருட்கள் ஏற்றுமதியை மேலும் ஊக்குவிக்கும் திட்டம் அறிவிப்பு
  • ஈரமான நீல நிற தோலுக்கு அடிப்படை சுங்க வரியிலிருந்து அரசாங்கம் முழுமையாக விலக்கு அளிக்கும்.

விலை உயரும் பொருட்கள்

  • தொடுதிரை பேனல்களுக்கான அடிப்படை சுங்க வரியை 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Previous Post

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் ராஜினாமா; டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு…

Next Post

“மத்திய பட்ஜெட் மாயாஜால, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கை” – EPS விமர்சனம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“மத்திய பட்ஜெட் மாயாஜால, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கை” – EPS விமர்சனம்!

“மத்திய பட்ஜெட் மாயாஜால, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கை” – EPS விமர்சனம்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    👌👌👌

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In