தொழிலாளர்களின் பணிமாற்றம்…
செயற்கை நுண்ணறிவால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் அடுத்த வேலைக்கு மாறுவதற்கு ஏதுவாக நிறுவனங்களைத் தொடங்குவதன் மூலம், சமூக-பொருளாதார பாதிப்பைக் குறைக்க முடியும் என்கின்றனர்.
“இந்தியாவின் குறைந்த திறன் மற்றும் குறைந்த மதிப்பு சேர்க்கப்பட்ட (Low-Value-Added Service) சேவைகளைக் கொண்ட வேலைகள் ஏ.ஐ-யின் பாதிப்புக்கு எளிதாக பலியாகக்கூடும். தொடக்கநிலைத் தொழிலாளர்களை இடைத்தர மற்றும் உயர்த்தர திறன்கொண்ட வேலைகளுக்கு மாற்ற வலுவான நிறுவனங்களை, திறன் மேம்பாட்டு அமைப்புகளை அமைக்கும்பட்சத்தில், ஏ.ஐ அவர்களுக்கு சவாலாக அமைந்தாலும் அவர்களை ஈடுசெய்ய முடியாது.” என பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஏ.ஐ நுழையும்போதும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் தொழிலாளர்களுக்காக நிறுவனங்கள் காப்பீடு செய்வதுபற்றியும் பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு செய்யும்போது, தொழிலாளர்கள் இடைத்தர மற்றும் உயர்த்தர திறன்கொண்ட வேலைகளுக்கு மாற்றப்படும் காலத்தில் அவர்களது வாழ்க்கைத்தரம் பாதுகாக்கப்படும். இந்தியாவின் சமூக கட்டமைப்பும் சிதைவடையாமல் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் AI முதலீடு?
தொழில்நுட்பங்களால் வரவிருக்கும் புதுமைகளைத் தடுப்பது நாட்டைப் பின்னோக்கி கொண்டுசெல்லக் கூடும். எனவே பொருளாதார அறிக்கை, புதுமைகளைத் தடுக்காமல் பொதுநலனை நேர்த்தியாக சமன்செய்யும் அணுகுமுறையை மேற்கொள்ள நிறுவனங்களுக்கு வழிகாட்டுகிறது.
சீனா மலிவு விலையில் உருவாக்கிய டீப் சீக் ஏ.ஐ (DeepSeek AI) அமெரிக்காவின் எல்.எல்.எம்களை(Large Language Model) மிஞ்சியதுடன், உலக ஸ்டாக் மார்கெட்டை அதிரச்செய்ததையும் பொருளாதார அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தியா மார்ச் மாதம், செயற்கை நுண்ணறிவில் 1.25 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் சேவை வழங்கலைச் சார்ந்ததாகவும், அதன் ‘இளம் மற்றும் சக்திவாய்ந்த’ தொழிலாளர்களைக் கொண்டதாகவும் இருப்பதனால் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அடுத்தகட்டத்துக்கு நகருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.
முடிவாக, பொருளாதார அறிக்கை 2024-25, மில்லியன் கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளதையும், அதனால் பாதிக்கப்படும் துறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறது. அத்துடன் தொழிலாளர்களை மற்ற வேலைகளுக்கு மாற்றுவதற்கான வழிகளையும் விவாதித்திருக்கிறது.

