இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாரத் ராஷ்டிர சமிதி (BRS) மாணவர் பிரிவு, நேற்று ஹைதராபாத்தில் உள்ள தொலைக்காட்சி சேனலின் அலுவலகத்தைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய காவல்துறை வட்டாரம், “தனியார் செய்தி அலுவலகம் மீதான தாக்குதலில் சுமார் 25-30 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் இரண்டு ஊழியர்கள் காயமடைந்திருக்கின்றனர். கட்டிடத்தின் கண்ணாடி முகப்பு உடைக்கப்பட்டிருக்கிறது.

கட்டிடத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த மூன்று வாகனங்களும் சேதமடைந்தன. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” எனத் தெரிவித்திருக்கின்றனர். ஆளும் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க-வும் இந்தத் தாக்குதலைக் கண்டித்திருக்கின்றனர்.
தெலுங்கானா பா.ஜ.க தலைவரும் மத்திய உள்துறை இணை அமைச்சருமான பண்டி சஞ்சய் குமார், “கே.டி.ஆரின் மகன் தலைமையிலான பி.ஆர்.எஸ் குண்டர்கள் மகா நியூஸ் மீது நடத்திய தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது வெறும் ஒரு கட்டிடத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்.
