Last Updated:
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த “Lifetime Achievement Award” பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இதன் மூலம் சிரஞ்சீவி பெற்றுள்ளார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது.
தெலுங்கு சினிமாவில் 4 தசாப்தங்களுக்கு மேலாக கோலோச்சி வரும் சிரஞ்சீவி, தனது தொண்டு நிறுவனம் மூலம் மருத்துவம் மற்றும் கல்வி உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், அவரின் சினிமா பங்களிப்பையும் சமூக தொண்டுகளையும் அங்கீகரிக்கும் விதமாக, “Team Bridge India”வின் வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த “Lifetime Achievement Award” பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இதன் மூலம் சிரஞ்சீவி பெற்றுள்ளார்.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிரஞ்சீவியின் சாதனைகளைப் பாராட்டினர். இது குறித்த புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்த சிரஞ்சீவி, வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
March 21, 2025 10:50 AM IST

