சென்னை புழல் சிறையில் தண்டனை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனகை்கு அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடமும் பணம் பெற்ற நிலையில், அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதாக சொல்லப்படுகிறது.


😄😄😄😄😄