ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், இந்தியா மீது மட்டுமல்ல, பிரேசில் மீதும் கூடுதல் 25 சதவிகித வரியை விதித்திருக்கிறது அமெரிக்கா.
இந்த வரி விதிப்பிற்கு ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார் பிரேசில் அதிபர் லூலா.
சமீபத்தில், பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்களை ஒன்றுசேர்த்து ஆன்லைன் கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தார் லூலா. அதில், “வரி பிளாக்மெயில் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது’ என்று கடுமையாக வரி விதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று லூலாவிற்கு போன் செய்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
“இன்று காலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் இருந்து போன்கால் வந்தது. நாங்கள் 30 நிமிடம் உரையாடினோம். மேலும், ஐ.நா பொதுச்சபையின் போது நியூயார்க்கில் இருவரும் பகிர்ந்துகொண்ட நல்ல தருணங்கள் குறித்து பேசினோம்.
இந்த நேரடி உரையாடல் என்பது மேற்கில் உள்ள இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளின் 201 ஆண்டுகால நட்பை வலுவாக்குவதற்கான வாய்ப்பாக நான் பார்க்கிறேன்.
