சென்னை : சென்னை விமான நிலையத்துக்கு 237 பயணிகளுடன் இன்று (பிப். 4) அதிகாலை வந்து கொண்டிருந்த சர்வதேச விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதும், தீவிர சோதனை நடத்தப்பட்டதில், விமானத்தில் வெடிபொருள்கள் எதுவுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.