புதுடில்லி: டில்லி உயர்நீதிமன்றத்தில் இன்று(பிப்.,15) வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இதனால் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டில்லி உயர்நீதிமன்றப் பதிவாளருக்கு நேற்று மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், ”இன்று(பிப்.,15) வெடிகுண்டு வெடிக்கும். எவ்வளவு பாதுகாப்பு அமைத்தாலும் அனைவரையும் வெடிகுண்டு வைத்து வெடிக்க செய்வோம்” என கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, டில்லி உயர்நீதிமன்றத்தில் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பகுதி வழியாக செல்லும் மக்களை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி நிகழ்ந்த வெடிகுண்டு விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

