Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிட்காயின் மோசடி :பாலிவுட் நடிகையின் ரூ.92 கோடி சொத்துக்கள் முடக்கம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 20, 2024
in Default
1
பிட்காயின் மோசடி :பாலிவுட் நடிகையின் ரூ.92 கோடி சொத்துக்கள் முடக்கம்..
24
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பிட்காயின் மோசடி வழக்கில், பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் பெயரில் உள்ள 97 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கையின் பின்னணி என்ன?

2017-ஆம் ஆண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்று வேரியபில் டெக் லிமிடெட் நிறுவனம் நாடு முழுவதும் விளம்பரம் செய்து, பொது மக்களிடமிருந்து ரூ.6 ஆயிரத்து 600 கோடி அளவுக்கு வசூலித்தது. ஆனால் கூறியபடி வட்டி வழங்காமல் மக்கள் முதலீடு செய்த பணம் பெரும் மோசடிக்கு உள்ளானது. இதனால் பிட் காயினில் முதலீடு செய்த ஆயிரக்கணக்கானோர் தங்களது பணத்தை இழந்தனர்.இந்த பிட்காயின் மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வந்தது. வேரியபில் டெக் நிறுவனத்தை நடத்தி வந்த அமித் பரத்வாஜ், அஜய், விவேக் மற்றும் சிம்பி பரத்வாஜ் உள்ளிட்ட ஏஜென்ட்டுகள் மீது டெல்லி மற்றும் மும்பையில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் உக்ரைனில் பிட்காயின் Mining Farm அமைக்க ராஜ் குந்த்ரா, 285 பிட்காயின்களை அமித் பரத்வாஜியிடமிருந்து வாங்கியதாக தெரியவந்தது. இன்னும் அந்த பிட்காயின் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவிடம்தான் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் மதிப்பு மட்டும் 150 கோடி ரூபாய் என்று அமலாக்க துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த பிட்காயின் மோசடி வழக்கை அமலாக்கப் பிரிவு தீவிரப்படுத்தி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக  இந்த மோசடியில் தொடர்புடையவர்களாக கருதப்படும் ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான 97 கோடி மதிப்புள்ள சொத்துகள் அமலாக்க துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் ஷில்பா ஷெட்டி பெயரில் மும்பை ஜுகுவில் இருக்கும் வீடு, புனேயில் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் பங்களா மற்றும் ராஜ் குந்த்ரா பெயரில் இருக்கும் ஷேர்களை அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்தது. பிட்காயின் மோசடியில் கிடைத்த பணத்தை கொண்டு ஷில்பா ஷெட்டி பெயரில் ராஜ் குந்த்ரா வீடு வாங்கியதாக அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு நாடு முழுவதும் ரெய்டு நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதில் சிம்பி பரத்வாஜ் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். அந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அஜய் பரத்வாஜ் மற்றும் மகேந்திர பரத்வாஜ் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை தொடர்கிறது.

இந்த நிலையில், பிட்காயின் மோசடி வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் பெயரில் உள்ள 97 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திரைப்பிரபலங்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

Zomato-க்கு அடிக்கு மேல் அடி – ரூ.11.82 கோடிக்கு GST பாக்கி நோட்டீஸ்..

Next Post

“பிரசார் பாரதி” அல்ல.. பாஜகவின் “பிரசார பாரதி” : Doordarshan காவிமயமானதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“பிரசார் பாரதி” அல்ல.. பாஜகவின் “பிரசார பாரதி” : Doordarshan காவிமயமானதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

"பிரசார் பாரதி" அல்ல.. பாஜகவின் "பிரசார பாரதி" : Doordarshan காவிமயமானதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    92 கோடி சொத்துக்களை முடக்கி வைத்ததோடு இல்லாமல் மேல் நடவடிக்கை எடுத்து அந்த சொத்துக்களை அரசுடைமை ஆக்க வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In