Cricket oi-Noorul Ahamed Jahaber Ali
Updated: Wednesday, June 7, 2023, 17:41 [IST]
லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஜெர்சியில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருவது ஏன்? விரிவாக பார்ப்போம். 2 வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் அமைந்து உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, அஜிங்கியா ரஹானா, சடேஸ்வர் புஜாரா, முஹம்மது ஷமி, முஹம்மது சிராஜ், உமேஷ் யாதவ், ஷுப்மன் கில், ஸ்ரீகர் பரத், சர்துல் தாக்கூர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். போட்டியின் சூழலுக்கு 4 வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை என்று கூறி உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளர் அஸ்வினை கேப்டன் ரோகித் சர்மா சேர்க்கவில்லை. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரான் கிரீன், அலெக்ஸ் கேரி, மிட்சல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலாண்ட் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இரு நாடுகளின் தேசிய கீதம் முழங்கிய பிறகு இந்த போட்டி தொடங்கப்பட்டது. தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது இந்தியா ஆஸ்திரேலியா அணி வீரர்கள் அணிவகுத்து நிற்கும்போது இரு அணி வீரர்களின் கைகளிலிலும் கறுப்பு பட்டை இருந்ததை பார்க்க முடிந்தது. பலருக்கும் ஏன் இரு அணி வீரர்களும் கறுப்பு பட்டை அணிந்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்திருக்கும். ஆம், கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் 288 உயர்களை பறித்து 1000 க்கும் அதிகமானோரை காயப்படுத்திய ஒடிசா மாநிலம் பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரு நாட்டு வீரர்களும் கறுப்பு பட்டை அணிந்தனர். அத்துடன் இரு அணியினர் ஒடிசா ரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Why are the players of India and Australia wearing black stripes on their jerseys in the World Test Championship final against Australia? Let’s see in detail.

