Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஹரியாணாவில் பாஜகவுக்கு ஹாட்ரிக் வெற்றி! காங்கிரஸின் தோல்விக்கு காரணம்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 8, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஹரியாணாவில் பாஜகவுக்கு ஹாட்ரிக் வெற்றி! காங்கிரஸின் தோல்விக்கு காரணம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹரியாணா மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, ஹரியாணாவில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று முன்னணி ஊடகங்கள் தெரிவித்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகள் நேர்மாறாக அமைந்துள்ளன.

ஜம்மு – காஷ்மீரில் இந்தியா கூட்டணி 49 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தாலும், 42 தொகுதிகளில் வென்ற தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்.எல்.ஏ.வே முதல்வராகவும், முக்கிய அமைச்சர் பதவிகளையும் வகிக்கவுள்ளனர். காங்கிரஸ் 38 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது பின்னடைவே.

இதுதான் முடிவு என்று முன்பே தெரியுமோ, என்னவோ.. காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பெயரளவில் குறைவான நாள்களை ஜம்மு – காஷ்மீரில் செலவிட்டு, ஹரியாணா தேர்தல் பிரசாரத்துக்கே முக்கியத்துவமும் கொடுத்தனர்.

ஹரியாணா முடிவுகள்

ஹரியாணா மாநில சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அக்டோபர் 5-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மேலும், 3 கட்டங்களாக நடைபெற்ற ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளுடன், ஹரியாணா வாக்குகளும் இன்று(அக். 8) காலை எண்ணப்பட்டன.

தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட போது, பாஜகவைவிட அதிக தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றிருந்தது. ஆனால், ஒவ்வொரு சுற்றாக வாக்குகள் எண்ணி முடிக்கையில், பாஜக முன்னிலை பெற்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முடிவில், பாஜக 48, காங்கிரஸ் 37, இந்திய தேசிய லோக் தளம் 2, சுயேச்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

தலைகீழான கருத்துக் கணிப்பு

அக்டோபர் 5-ஆம் தேதி மாலை வெளியிடப்பட்ட பெரும்பான்மையான ஊடகங்களின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சி என்பதே.

சிஎன்என், ரிபப்ளிக் பாரத்-மாட்ரிஸ், இந்தியா டுடே மற்றும் சி ஓட்டர், டைம்ஸ் நவ் என அனைத்து முதன்மை ஊடகங்களும் ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி 50 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிவித்திருந்தனர்.

ஆனால், கருத்துக் கணிப்புகளுக்கு நேர்மாறாக பாஜக 50 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது எதிர்க்கட்சிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தோல்விக்கு காரணம்?

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் ஹூடாவுக்கு, மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜாவுக்கும் இடையேயான உள்கட்சி கோஷ்டிப் பூசல்தான்.

தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, முதல்வர் பதவிக்கான போட்டியை இருவரும் தொடங்கினர். இதனிடையே, மாநிலங்களவை உறுப்பினரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான சுர்ஜேவாலாவும் தனது மகனுக்கு முக்கியத்துவம் கோரி கட்சிக்குள் மும்முனைப் போட்டியை ஏற்படுத்தினார்.

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சலிப்பைப் பயன்படுத்தி வெற்றி வியூகத்தை வகுக்காமல், முதலில் பிரசாரத்தையே குமாரி செல்ஜா புறக்கணித்தார். பின், ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களின் தலையீட்டுக்கு பிறகு பிரசாரத்தில் பங்கேற்றது அரசியல் ஸ்டண்ட்.

அதேபோல், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்துக்கு பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இதுவாகும்.

இந்த தேர்தலில், வேளாண் சட்டத்தின்போது, விவசாயிகளுக்கு ஏற்பட்ட இன்னல்களை நினைவுப் படுத்தி, அந்த வாக்குகளை பெறுவதிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது.

இதனிடையே, பாஜக அரசுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகளையும் புறம்தள்ளி, காங்கிரஸின் உள்கட்சிப் பூசலை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்தி தேர்தல் களத்தை எளிமையாக கையாண்டு வாகை சூடியுள்ளது பாஜக.

ராகுல் காந்தியுடன் பூபேந்தர், குமாரி

வாக்குகளை பிரித்த ஆம் ஆத்மி

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிட்டன. ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் 9-இல் காங்கிரஸும், ஒன்றில் ஆம் ஆத்மியும் போட்டியிட்டன. போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் ஆம் ஆத்மி தோல்வியை தழுவியது.

இந்த நிலையில், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

இதனிடையே, ஆம் ஆத்மி ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாவிட்டாலும், கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இந்த வாக்குகள் காங்கிரஸுக்கு கிடைத்திருந்தால், நூலிழை தோல்விகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

இதுமட்டுமின்றி, பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்த இருவரும் ஒன்றிணைந்து செயல்பட்டிருந்தால், இதர சிறுசிறு கட்சிகளுக்கு சிதறிய வாக்குகளும் காங்கிரஸுக்கு கிடைத்திருக்கும்.

ஆம் ஆத்மியை சமரசம் செய்து காங்கிரஸ் கூட்டணி வைக்காதது மிகப் பெரிய தவறே.

வினேஷ் – பஜ்ரங்கின் வரவு வீண்

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வகுத்த வியூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று மல்யுத்த வீரர்கள் கட்சியின் இணைந்தது.

பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷணுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்கள் வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும்.

இவர்கள் இருவரும் ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸின் இணைந்த நிலையில், பஜ்ரங் புனியாவுக்கு கட்சிப் பொறுப்பும், வினேஷுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

அதன்படி, ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட வினேஷ் போகத், பாஜக வேட்பாளரை 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி அடைந்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தால், வினேஷ் போகத் விளையாட்டுத் துறை அமைச்சராகி இருக்கக்கூட வாய்ப்பு இருந்திருக்கும்.

வெற்றிப் பேரணியில் வினேஷ் போகத்

பாஜக ’ஹாட்ரிக்’

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றப் பிறகு நடைபெற்ற மூன்று ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் தொடர்ச்சியாக பாஜக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

2014ஆம் ஆண்டில் காங்கிரஸை படுதோல்வி அடையச் செய்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக மட்டும் 47 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.

2019ஆம் ஆண்டில், பாஜகவுக்கு(40) பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜனநாயக ஜனதா தளத்துடன்(10) இணைந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது பாஜக.

மீண்டும் நயாப் சிங் சைனி

ஹரியாணா முதல்வராக இருந்த மனோகர் லால் கட்கர் கடந்த மார்ச் மாதம் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தற்போது மத்திய அமைச்சராகியுள்ளார்.

இந்த நிலையில், ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்னதாகவே, நயாப் சிங் சைனியை முதல்வராக்கியது பாஜக.

ஹரியாணாவில் கணிசமான மக்கள்தொகையை கொண்ட சைனி சமூகத்தை சார்ந்த நயாப் சிங், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் முகமாக மாநிலத்தில் வலம்வருகிறார்.

தற்போது, மீண்டும் இவரையே ஹரியாணாவின் முதல்வராக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

ஹரியாணா தேர்தல் வரலாறு



.

Previous Post

J&K: ராகுல் – ஓமர் அப்துல்லா மேஜிக்… ஜம்மு காஷ்மீரில் `INDIA’ கூட்டணி கொடியேற்றியது எப்படி?! |How India Alliance Won In Jammu Kashmir?

Next Post

இந்த வாரம் சென்னையிலிருந்து சித்தேஸ்வர சுவாமி கோணா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்லலாமா? | Chennai to Siddeswara swamy kona waterfalls is the best weekend spot to visit from chennai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்த வாரம் சென்னையிலிருந்து சித்தேஸ்வர சுவாமி கோணா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்லலாமா? | Chennai to Siddeswara swamy kona waterfalls is the best weekend spot to visit from chennai

இந்த வாரம் சென்னையிலிருந்து சித்தேஸ்வர சுவாமி கோணா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா செல்லலாமா? | Chennai to Siddeswara swamy kona waterfalls is the best weekend spot to visit from chennai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In