Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

MSME ப்ரோமோஷன் கவுன்சில் மோசடி : பணத்தை கொடுத்து செட்டில் செய்துவிட்டோம் ஜாமின் கொடுங்கள் என பாஜகவின் பால்கனகராஜ் வாதம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
MSME ப்ரோமோஷன் கவுன்சில் மோசடி : பணத்தை கொடுத்து செட்டில் செய்துவிட்டோம் ஜாமின் கொடுங்கள் என பாஜகவின் பால்கனகராஜ் வாதம்..!
56
SHARES
91
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்னேற்ற ஆணையம் (MSME Promotion Council) என்ற அமைப்பில் பதவி தர கோடிக்கணக்கில் பணம் பெற்று, மோசடி நடைபெற்றுள்ளதாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. ஆனால், இப்படி ஒரு அமைப்பே இல்லையாம். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் என்ற அமைப்பின் சார்பில் சிறு தொழில் செய்வதற்கு மத்திய அரசிடம் இருந்து கடன் பெற்று தருவதாக கூறி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அமைப்பின் தேசிய தலைவராக மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முத்துராமனும், தேசிய செயலாளராக பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ், தமிழ்நாடு தலைவராக பாஜகவை சேர்ந்த நடிகை நமீதாவின் கணவர் சவுத்ரி ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், பாஜக நிர்வாகி ஒருவர், தன்னிடம் ரூ.50 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, இந்த அமைப்பின் மாநில தலைவர் பதவியை வழங்கவில்லை என கோபால்சாமி என்பவர் புகார் கூறியுள்ளார். பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணனை கோபால்சாமி சந்தித்த போதுதான், மத்திய அரசின் கீழ் இப்படி ஒரு ஆணையமே இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, புகாரின் பேரில் விசாரணை நடத்தி முத்துராமன், துஷ்யந்த் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த அமைப்பில் மாநில தலைவர் ஆவதற்கு நமீதாவின் கணவர் சௌத்ரி கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

இன்றைய நீதிமன்ற நிகழ்வுகள்.

MSME Promotion Council மோசடி விவகாரத்தில் இருந்து எப்படியாவது முத்துராமனை வெளிக்கொண்டு வந்துவிடவேண்டுமென தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர் பஜாகாவினர்..

புகார்தாரர் கோபாலசாமிக்கு பணத்தை ரொக்கமாக செட்டில் செய்துவிட்ட விஷயத்தை நீதிமன்றத்தில் கூறி ஜாமின் வழங்கவேண்டுமென பால்கனகராஜ் கோரிக்கை வைத்தார். ஆனால்,அரசுத்தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் அடிப்படையில் விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதில், கவனிக்க வேண்டியது என்னவென்றால், முத்துராமனுக்காக ஆஜராவது பிஜேபியின் பால் கனகராஜ்.. புகார்தாரர் கோபால சாமிக்காக ஆஜரானதும் பிஜேபியின் செய்தித்தொடர்பாளர் குமரகுரு..

ஆனால், கடந்த 10-ம் தேதி முத்துராமனின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர் கோபாலசாமி தரைப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி, ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தவர் குமரகுரு.. தற்போது, கோபாலசாமிக்கு பணம் செட்டில் செய்யப்பட்டுவிட்டதால், 21-11-23 ம் தேதி,இன்று விசாரணைக்கு வந்த போது குமரகுரு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்துவிட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நாள், பா ஜ க பொருளாதார பிரிவின் மாநில செயலாளர் நண்பர் துரைப்பாண்டியன் கோபால் சாமி மற்றும் சில நண்பர்களுடன் என் அலுவலகம் வந்திருந்தார். மத்திய அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முன்னேற்ற ஆணையத்தின் (MSME Promotion Council)…

— Narayanan Thirupathy (மோடியின் குடும்பம்) (@narayanantbjp) November 2, 2023

MSME Promotion Council மோசடி
விவகாரத்தில் இருந்து எப்படியாவது முத்துராமனை வெளிக்கொண்டு வந்துவிடவேண்டுமென #அலிபாபா_கொள்ளையர்கள்
தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

புகார்தாரர் கோபாலசாமிக்கு பணத்தை ரொக்கமாக செட்டில் செய்துவிட்ட விஷயத்தை நீதிமன்றத்தில் கூறி ஜாமின் வழங்கவேண்டுமென… https://t.co/287Bj6ubXS

— Aravindakshan B R (@RealAravind36) November 21, 2023
Previous Post

டெல்லி குடிநீர் மேலாண்மைக்கான மத்திய அரசின் நிதி நிறுத்தம்..! : டெல்லியில் குடிநீர் கழிவுநீர் வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி.

Next Post

ஊழல் மற்றும் வாரிசு அரசியலின் சின்னமாக காங்கிரஸ் திகழ்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஊழல் மற்றும் வாரிசு அரசியலின் சின்னமாக காங்கிரஸ் திகழ்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்

ஊழல் மற்றும் வாரிசு அரசியலின் சின்னமாக காங்கிரஸ் திகழ்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In