மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி 78 தொகுதிகளில் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சூரத் மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியின்றி பாஜக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது பாஜக 48, காங்கிரஸ் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜகவை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, அனுராக் தாக்குர், பிரஹலாத் ஜோஷி, ஜோதிராதித்யா சிந்தியா, கங்கனா ரணாவத், பசவராஜ் பொம்மை, சுரேஷ் கோபி, மஜத குமாரசாமி உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி.வேணுகோபால், சசி தரூர், சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்.
