Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தமிழகத்தில் திமுக அல்வா கொடுக்கும் போராட்டம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 8, 2024
in Default
0
தமிழகத்தில் திமுக அல்வா கொடுக்கும் போராட்டம்!
51
SHARES
83
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா அடைந்திருக்கும் பொருளாதார வளர்ச்சி குறித்து மத்திய பாஜக அரசு நாளை மறு தினம் வெள்ளை அறிக்கை தரவிருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்திற்கு உரிய நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வா வழங்கி இருக்கிறார்கள்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

மத்திய அரசு மாநிலங்களுக்கான உரிய நிதிப்பகிர்வை வழங்குவதில்லை என திமுக உள்ளிட்ட பிராந்திய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. தமிழக அரசு வரி வருவாயில் 1 ரூபாயை மத்திய அரசுக்கு அளித்தால், 29 பைசா மட்டுமே திருப்பித் தரப்படுவதாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கோரிய நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை எனக் கூறி, நாடாளுமன்றத்தில் தமிழக எம்பி-க்கள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர்.

கர்நாடகா போராட்டம்

கர்நாடகா போராட்டம்

இந்த சூழலில், தற்போது கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களும் இந்த குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றன. கர்நாடக முதல்வர் ஒருபடி மேலே போய் மத்திய அரசை கண்டித்து டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தினர். இதில் அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில், இன்று தமிழகம் மற்றும் கேரளா சார்பில் போராட்டம் நடத்தப்படகிறது.

திமுகவினர் வழங்கிய அல்வா

இந்த நிலையில், மத்திய அரசு பாரபட்சமாக நிதிப்பகிர்வு செய்வதை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அல்வா கொடுக்கும் நூதன போராட்டத்தை இன்று நடத்தி இருக்கிறது திமுக.

சென்னையில் மட்டுமல்லாது வெளி மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு திமுகவினர் அல்வா கொடுத்தனர். சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகள், ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கும் திமுகவினர் அல்வா வழங்கினர்.

அல்வாவுடன் இலவச இணைப்பாக இணைக்கப்பட்ட நோட்டீசில் ‘ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்கிய நிதி ஜீரோ’ என ஆங்கிலத்தில் அச்சடித்து அதில் ஒரு அல்வா துண்டை இணைந்து வழங்கி வருகின்றனர். திமுகவினரின் இந்த நூதன போராட்டம் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரமாகவும் மாறி இருப்பது குறிப்பிடத் தக்கது.

Previous Post

மத்திய அரசு அதிர்ச்சி… டெல்லியை முற்றுகையிட்டு போராடும் மாநில அரசுகள்!

Next Post

வெளிநாட்டு முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுங்க… EPS வலியுறுத்தல்.!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வெளிநாட்டு முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுங்க… EPS வலியுறுத்தல்.!

வெளிநாட்டு முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுங்க... EPS வலியுறுத்தல்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In