Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

குமரி: திமுக-வில் சேர்ந்த அர்ச்சகர்; போராட்டம் நடத்திய பாஜக – வேளிமலை கோயில் சர்ச்சை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 14, 2024
in அரசியல் செய்திகள்
0
குமரி: திமுக-வில் சேர்ந்த அர்ச்சகர்; போராட்டம் நடத்திய பாஜக – வேளிமலை கோயில் சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது வேளிமலை குமாரசுவாமி கோயில். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் இந்தக் இக்கோயிலில், மூன்று மேல் சாந்திகள் (அர்ச்சகர்கள்) இருக்கிறார்கள். ஒரு மேல்சாந்தி ஒரு மாதம், அதற்கு அடுத்த மாதம் மற்றொரு மேல்சாந்தி என வரிசைப்படி ஒவ்வொரு அர்ச்சகருக்கும் கோயிலில் பணி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மேல் சாந்திகளில் ஒருவரான ஜெயராம் போற்றி, பக்தர்களை தரக்குறைவாக திட்டுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன் அவர் மணக்கரை தர்மசாஸ்தா கோயிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பின்னர், நீதிமன்றத்தில் தடையாணை பெற்ற ஜெயராம் போற்றி, மீண்டும் வேளிமலை குமாரசுவாமி கோயிலிலேயே பணியில் இணைந்தார். இதனிடையே அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார் ஜெயராம். இதற்கிடையே ‘பக்தர்களைத் தரக்குறைவாக பேசிவரும் ஜெயராம் போற்றியை இடம் மாற்றம் செய்யவேண்டும்’ எனக் கூறி போராட்டத்தில் குதித்திருக்கிறது குமரி பா.ஜ.க. முதற்கட்டமாக தக்கலையில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும், தொடர் போராட்டங்களுக்கு பாஜக தயாராகி வருகிறது.

வேளிமலை குமாரசுவாமி திருக்கோயில்

இதுகுறித்துப் பேசுகிற கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க துணைத் தலைவர் குமரி ப.ரமேஷ், “பக்தர்களை திட்டுவது, அவமரியாதையாக நடத்துவது என தொடர்ந்து செயல்பட்டு வந்ததால்தான் ஜெயராம் போற்றியை பணியிடமாற்றம் செய்தனர். ஆனால், அவரோ கோர்ட்டில் தடை ஆணைப் பெற்று மீண்டும் வேளிமலை குமாரசுவாமி கோயிலிலே பணியிலே நீடிக்கிறார். அதுமட்டுமின்றி தி.மு.க கட்சியில் இணைந்து, அனைத்து சாதி, மதத்தினரையும் கருவறைக்கு அழைத்துச் செல்வேன் என்கிறார். அவரை பணியிடம் மாற்றும் வரை தொடர்ந்து போராடுவோம்” என்றார்.

குமரி ப.ரமேஷ்

இந்த பிரச்னையின் உள்விபரம் குறித்துப் பேசுவோர், “வேளிமலை கோயில் விசேஷங்களின்போது பக்தர்களுக்கு பிரசாதம் கொடுத்து தட்சணை பெறுவதில் அர்ச்சகர்களிடையே போட்டி நிலவுகிறது. இதனால் கோயில் ஊழியர்களுக்கிடையேயும் நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. விழாக் காலங்களில் யார் பணியில் இருப்பது என்ற பனிப்போரில் ஜெயராம் போற்றி சர்ச்சை பேசுபொருள் ஆகிவிட்டது” என்கின்றனர்.

பா.ஜ.க ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து மேல்சாந்தி ஜெயராமிடமே விளக்கம் கேட்டபோது, “கோயிலில் நிறைய தவறுகள் நடக்கின்றன. அதைச் சிலர் பதுக்குவதை நான் வெளியே கூறிவிடுவேன் என்ற அச்சத்தில் என்னை இங்கிருந்து அனுப்பத் துடிக்கிறார்கள். விழாக்காலத்தில் பணியிலிருக்கும் வகையில் ‘ஆண்டுக்கு ஆறுமாதம் நீ ஆறு மாதம் நான்…’ என பங்கு போடுவதற்காக என்னைக் குறித்து தவறாகச் சித்தரிக்கிறார்கள். அமைச்சரை சந்தித்தது என் தனிப்பட்ட விஷயம். அதை அரசியலாக்கத் தேவை இல்லை” என்றார். இதையடுத்து வேளிமலை குமாரசுவாமி கோயில் மேலாளர் மோகன்குமாரிடம் பேசியபோது, “இது ஊழியர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்னை மட்டுமே. அதனால் கோயில் நிர்வாகத்தில் எந்தச் சிக்கலும் இல்லை.” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY



.

Previous Post

ஆர்.ஜி. கர் மருத்துவமனையைச் சுற்றி தடை உத்தரவு: செப்.30 வரை நீட்டிப்பு!

Next Post

Taj Mahal : உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலின் பிரதான குவிமாடத்தில் தண்ணீர் கசிவு .. வீடியோ வைரல்!-taj mahal water leak in the main dome of taj mahal one of the wonders of the world video viral

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Taj Mahal : உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலின் பிரதான குவிமாடத்தில் தண்ணீர் கசிவு .. வீடியோ வைரல்!-taj mahal water leak in the main dome of taj mahal one of the wonders of the world video viral

Taj Mahal : உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலின் பிரதான குவிமாடத்தில் தண்ணீர் கசிவு .. வீடியோ வைரல்!-taj mahal water leak in the main dome of taj mahal one of the wonders of the world video viral

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In