இந்த நிலையில், பட்டயக் கணக்காளர் தேர்வை மத்திய அரசு நடத்தவில்லை என்றும், தமிழகம்தவிர வேறுசில மாநிலங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாகவும் தமிழக பாஜக செயலாளர் டாக்டர் எஸ்.ஜி. சூர்யா பதிலளித்துள்ளார்.
டாக்டர் எஸ்.ஜி. சூர்யா, தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “பொங்கல் என்பது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு தேசிய பண்டிகை என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். பொங்கல் பண்டிகை பிற மாநிலங்களிலும் மகர சங்கராந்தி, வட இந்தியாவில் லோஹ்ரி, உத்தரப் பிரதேசத்தில் கிச்சடி, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணி, ஹரியாணா மற்றும் பஞ்சாப்பில் மாஹி, வடகிழக்கு மாநிலங்களில் பிஹு என்றும் கொண்டாடப்படுகிறது.
