காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (ஜூலை 27) மணிப்பூர் வன்முறைக்காக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ கடுமையாக சாடினார். மேலும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அதிகாரத்திற்காக எதையும் செய்ய முடியும் என்றும், அதிகாரத்தில் இருக்க மணிப்பூரை எரிக்கவும் பாஜக தயாராக இருப்பதாகவும் கூறினார்.
நாட்டில் எங்கும் கலவரம் ஏற்படும் போது சாதாரண மக்கள் அதன் வலியையும் கொடூரத்தையும் உணர்கிறார்கள், ஆனால் மணிப்பூரில் நடந்த வன்முறைக்கு பாஜக மற்றும் RSS காரர்கள் எந்த வலியையும் உணரவில்லை என்றார்.
இந்தியாவில் ஏதேனும் ஒரு சமூகம் அல்லது குழுவைச் சேர்ந்த ஒருவர் காயப்பட்டால் மக்கள் பொதுவாக வருத்தப்படுவார்கள் இருப்பினும், மணிப்பூர் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் எந்த வலியையும் உணரவில்லை, “அவர்கள் நாட்டைப் பிளவுபடுத்துகிறார்கள், ஆரம்பத்தில் இருந்தே அதைச் செய்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ ராகுல் விமர்சிக்கும் வீடியோவை காங்கிரஸ் கட்சியின் ட்விட்டரில் பகிர்ந்துள்ளளனர்.


மணிப்பூர் நிலவரம் பற்றி நன்கு அறிந்தவையான அரசியல் பத்திரிகைகள் நாளேடுகளில் எழுத்துகளிலும் சமூக வளர்ச்சியும் பார்ப்பது வேதனையே பெரும் மன உளைச்சலாகவே உள்ளது மேலும் இந்நிலை உருவாக தீர விசாரிக்க வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோள். இவன் சமூக ஆர்வலர்.