Last Updated:
BJP MP Nishikant Dubey | பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர உச்சநீதிமன்றம் அட்டர்னி ஜெனரலை அணுகுமாறு அறிவுறுத்தியது.
பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அட்டர்னி ஜெனரலை அணுகுமாறு மனுதாரரை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உச்சநீதிமன்ற செயல்பாடுகளை விமர்சித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில் கருத்துகளை வெளியிட்டிருந்தார். அதில் ஓரினச்சேர்க்கை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மத மோதலை தூண்டுவதாகவும், உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றும் என்றால், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளை மூடிவிடலாம் என்றும் விமர்சித்திருந்தார்.
நிஷிகாந்த் துபேவின் சர்ச்சை பதிவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தன. இதைத்தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, பாஜக நீதித்துறையை மதிப்பதாகவும், நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார். அரசியலமைப்பை பாதுகாக்கும் வலுவான தூணாக நீதிமன்றங்கள் உள்ளதாகக் கூறியுள்ள அவர், பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே உள்ளிட்டோரின் கருத்துகளை முற்றிலும் நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். பாஜகவினர் இனி இதுபோன்ற விமர்சனங்களை முன்வைக்கக் கூடாது என்றும் ஜெ.பி.நட்டா அறிவுறுத்தினார்.
இந்நிலையில், நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில், நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த வழக்கறிஞர்கள் முறையிட்டனர். அப்போது, நிஷிகாந்த் துபே எம்.பி., என்பதால், அட்டர்னி ஜெனரலிடம் அனுமதி பெறுமாறு கவாய் தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Delhi,Delhi,Delhi
April 22, 2025 9:03 AM IST

