Last Updated:
ஆபரேஷன் சிந்தூர் பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கிய கர்னல் சோபியா குரேஷி குறித்து மத்திய பிரதேசம் பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா தெரிவித்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனையடுத்து பல்வேறுகட்ட ஆலோசனைக்கு பிறகு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ஆபரேஷனை இந்தியா, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தியது. இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
பயங்கரவாதிகள் முகாம் அழிப்பைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்திய கிராமங்களின் மீது நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இதன் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நிலவி வந்தது. இதனால், தொடர்ந்து போர் பதற்றமும் ஏற்பட்டது. தற்போது இரு நாடும் சண்டை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. இதனால், எல்லையில் பதற்றம் சற்று குறைந்துள்ளது.
முன்னதாக இரு நாடும் மாறி மாறி தாக்கி வந்தபோது, தாக்குதல் குறித்த நிலவரங்களை கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் இணைந்து செய்தியாளர்ச் சந்திப்பில் விளக்கம் அளித்துவந்தனர். இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கிய கர்னல் சோபியா குரேஷி குறித்து மத்திய பிரதேசம் பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா தெரிவித்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பாஜக அமைச்சர், தீவிரவாதிகளுக்கு அவர்களின் சொந்த சகோதரியைப் பயன்படுத்தி பிரதமர் பாடம் கற்பித்ததாக கூறியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
मध्य प्रदेश में BJP के मंत्री विजय शाह ने हमारी सेना की जांबाज बेटियों को ‘आतंकवादियों की बहन’ कहा है। ये बेहद शर्मनाक है।
इस पाप के लिए 👇
• PM मोदी और BJP देश से माफी मांगें
• विजय शाह को तुरंत पद से बर्खास्त करें pic.twitter.com/I2ibHJlv7M
— Congress (@INCIndia) May 13, 2025
இது குறித்து காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “மத்தியப் பிரதேசத்தில் பாஜக அமைச்சர் விஜய் ஷா, நமது ராணுவத்தின் துணிச்சலான மகள்களை ‘பயங்கரவாதிகளின் சகோதரிகள்’ என்று அழைத்துள்ளார். இது மிகவும் வெட்கக்கேடானது. இந்தப் பாவத்திற்காக, பிரதமர் மோடியும் பாஜகவும் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். விஜய் ஷாவை உடனடியாக அவரது பதவியில் இருந்து நீக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
May 13, 2025 10:11 PM IST

