மதச்சார்பற்ற இந்தியாவின் வரலாற்றில் ஓர் இருண்ட பக்கம், 1992-ல் வலதுசாரி குழுக்கள் செய்த பாபர் மசூதி இடிப்பு சம்பவம்.
இந்துக்களால் கடவுளாக வழிபடப்படும் ராமர் பிறந்த இடத்தில்தான் பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கிறது, அதை மீட்டு ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என 1990-ல் விஷ்வ இந்து பரிஷத் (VHP), ஆர்.எஸ்.எஸ் (RSS), பா.ஜ.க (BJP) உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளால் எல்.கே. அத்வானி தலைமையில் ராம் ஜென்ம பூமி ரத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.
அந்த யாத்திரையின் முடிவில் கலவரம் ஏற்பட்டு, இந்தியாவின் வரலாற்றுச் சின்னமாக இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
அந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.

ராம் ஜென்ம பூமி யாத்திரை தொடங்கப்படுவதற்கு முந்தைய ஆண்டுதான் பீகாரின் பாகல்பூரில் இந்த மதக் கலவரம் நடந்தேறியது.
1989 ஆகஸ்ட்டில் இந்துக்களின் பிஷாரி பூஜா பண்டிகையும், முஸ்லிம்களின் மொஹரம் பண்டிகையும் ஒரே மாதத்தில் வரவே அம்மாதம் முதலே பாகல்பூர் மாவட்டத்தில் வகுப்புவாத வன்முறை பதட்டங்கள் தொற்றிக்கொண்டன.
People’s Union of Civil Liberties (PUCL) அறிக்கையின்படி ஆகஸ்ட் 12 முதல் 22 ஆகஸ்ட் வரை அந்த மாவட்டத்தில் பதட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்தப் பதட்டமான சூழலில் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட செங்கற்களைத் திரட்டும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் `ராம்ஷிலா’ செயல்திட்டத்தின் ஒருபகுதியாக அக்டோபரில் பாகல்பூர் ஊர்வலம் நடந்தது.
