இதற்கு, தென் மாவட்டத்தில் எம்.எல்.ஏ-வாகவும், அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்க நெளிவு, சுளிவு தெரியும். கூடவே முக்குலத்தோர் வாக்குகள் கிடைக்கும் என டெல்லி கருதுகிறது. இதுவரை மாநில தலைவராக நாடார், கவுண்டர் சமுதாயத்தினர் இருந்து விட்டார்கள். அடுத்ததாக வன்னியர், முக்குலத்தோருக்குத்தான் கொடுக்க வேண்டும். ஆனால் வன்னியர் சமுதாயத்தில் பா.ஜ.க-வுக்கு பிரபலமான தலைவர் இல்லை. எனவேதான் நயினாருக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது” என்றார்.
எனினும் பாஜக தலைமை அதிரடி முடிவுகளுக்கு பெயர் பெற்றது. கடைசி நேர ட்விஸ்ட்களும் எதிர்பார்க்கலாம். எல்லாம் வரும் 6-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வந்து போன பிரகு தான் அறிவிப்பாக வெளிவரும் என்கிறார்கள் டெல்லி பாஜக தரப்பினர்.
