Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஏகப்பட்ட வாரிசுகளுக்கு சீட்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த மஹா.பாஜக!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2024
in அரசியல் செய்திகள்
1
ஏகப்பட்ட வாரிசுகளுக்கு சீட்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்த மஹா.பாஜக!
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மகாராஷ்டிரா சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கு ஆளும் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. நேற்று முன் தினம் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் அஜித் பவார், தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றனர். இவர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினர். தொகுதி பங்கீடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் 22-ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. இதையடுத்து இன்று பா.ஜ.க 99 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது. இதில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் தேவேந்திர பட்னாவிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 151 தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறது. மாநில பா.ஜ.க தலைவர் சந்திரசேகர் பவன்குலே காமாதி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சயான் கோலிவாடாவில் மீண்டும் கேப்டன் தமிழ்செல்வத்திற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர தானே தொகுதியில் சஞ்சய் முகுந்த் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தானே தொகுதி தங்களுக்கு வேண்டும் என்று சிவசேனா(ஷிண்டே) கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் அதற்கும் சேர்த்து பா.ஜ.க வேட்பாளரை அறிவித்து இருக்கிறது. ஐரோலி தொகுதியில் கணேஷ் நாயக்கும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கொலாபாவில் சபாநாயகர் ராகுல் நர்வேகரும், மலபார் ஹில் தொகுதியில் மங்கல் பிரபாத் லோதாவும், பாந்த்ரா மேற்கு தொகுதியில் மும்பை பா.ஜ.க தலைவர் ஆசிஷ் ஷெலாரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் பா.ஜ.க-வில் சேர்ந்த முன்னாள் முதல்வர் அசோக் சவானின் மகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சுதிர் முங்கந்திர்வாருக்கு பல்லர்புர் தொகுதியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 99 பேரில் 13 பேர் பெண்கள் ஆவர்.

அறிவிக்கப்பட்டுள்ள தொகுதிகள் அனைத்திலும் ஏற்கெனவே கடந்த முறை பா.ஜ.க வெற்றி பெற்றவையாகும். வேட்பாளர் பட்டியல் குறித்து பா.ஜ.க தலைவர்களிடம் பேசியபோது, தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது என்று தெரிவித்தனர். மற்றொருபுறம் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடித்து வருகிறது. காங்கிரஸ் கோட்டையாக கருதப்படும் விதர்பாவில் தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் தொகுதி பங்கீடு இறுதியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

வரும் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 99 வேட்பாளர்களின் முதல் பட்டியலில் பாஜகவின் பலத்தலைவர்களான துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மாநிலத் தலைவர் சந்திரசேகர் பவான்குலே மற்றும் அவர்களது முக்கிய உதவியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ரத்னகிரி-சிந்துதுர்க் எம்.பி.யும், முன்னாள் முதல்வருமான நாராயண் ரானேவின் மகன் கன்காவ்லியில் இருந்து மறுபடியும் போட்டியிடுகிறார்.

மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ் ஷெலார், மும்பையின் வாந்த்ரே வெஸ்ட் தொகுதியில் இருந்து மறுபோட்டியிடுகிறார்.

மாநில அமைச்சர்கள் சுதிர் முங்கண்டிவார் மற்றும் கிரிஷ் மகாஜன் ஆகியோர் முறையே பல்லார்பூர் மற்றும் ஜாம்னரில் இருந்து மறுபடியும் போட்டியிடுகிறார்.

ராஜ்யசபா எம்.பி.யும், முன்னாள் முதல்வருமான அசோக் சவானின் மகளான ஸ்ரீஜெயா சவான், போகரின் குடும்ப தொகுதியில் போட்டியிடுகிறார்.

Previous Post

ஈஷா-வில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர்.. அதிர்ச்சி தகவல்.

Next Post

தமிழ்த் தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநரை குறை சொல்லாதீர்கள்: ஓபிஎஸ் வேண்டுகோள்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழ்த் தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநரை குறை சொல்லாதீர்கள்: ஓபிஎஸ் வேண்டுகோள்..

தமிழ்த் தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநரை குறை சொல்லாதீர்கள்: ஓபிஎஸ் வேண்டுகோள்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    அரசியல் சம்பந்தப்பட்ட இதற்கு நான் கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In