Last Updated:
வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர், அங்கன்வாடிகளில் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும், பொறிச்ச கோழியும் வேண்டும் என்ற மழலையின் குரல், கேரள கோட்டை வரை எட்டியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம் அங்கன்வாடி செல்லும் மகன் ஷங்குவுக்கு, அவர் தாய் பிரியாணி ஊட்டிக்கொண்டிருந்தார். அப்போது, தங்கள் அங்கன்வாடிகளில் உப்புமாவுக்கு பதிலாக இதே போல் பிரியாணி தர வேண்டும் என்று ஷங்கு மழலை மொழியில் கூறினார். பொறிச்ச கோழியும் தர வேண்டும் என்ற தனது விருப்பத்தை கூறி ரசிக்க வைத்தார் அந்த குழந்தை.
இதை வீடியோவாக பதிவு செய்த தாய், சமூக வலைதளங்களில் பகிர, அது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வரை சென்றடைந்தது.
இந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த அமைச்சர், அங்கன்வாடிகளில் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
அதே சமயம் குழந்தை ஷங்குவின் கோரிக்கையை அங்கன்வாடி உணவு பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
February 04, 2025 3:29 PM IST
“அங்கன்வாடியில் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணி, பொறிச்ச கோழி” – கேரள கோட்டை வரை எட்டிய மழலை குரல்!


