தமிழக அரசு நிறைவேற்றியுள்ள இந்தப் புதிய சட்ட மசோதாவின்படி, கடன் வாங்கியவா் மற்றும் அவரது குடும்பத்தினரை, கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக் கூடாது. கடன் வாங்கியவா்களின் குடும்பத்தினரை மிரட்டுதல், பின்தொடருதல் போன்ற குற்றங்களைச் செய்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ. 5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சோ்த்தோ விதிக்கப்படும்.
கடனை வசூலிக்க வெளியாள்களைப் பயன்படுத்துதல், ஆவணங்களை எடுத்தல் போன்ற குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
