Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிஜு பட்நாயக்: உயரம் கருதி அல்ல, உன்னதம் கருதி… `உயர்ந்த மனிதன்’ | `The Tall Man – Biju Patnaik’ | A Special article on Biju Patnaik, former CM of odissa

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 5, 2025
in அரசியல் செய்திகள்
0
பிஜு பட்நாயக்: உயரம் கருதி அல்ல, உன்னதம் கருதி… `உயர்ந்த மனிதன்’ | `The Tall Man – Biju Patnaik’ | A Special article on Biju Patnaik, former CM of odissa
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இன்று ஒடிசா முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் பிறந்தநாள். ஆனந்த விகடனில் வெளியான “தமிழ் நெடுஞ்சாலை’ தொடரில் அவர் பற்றி ஒடிசா முதல்வரின் முதன்மை ஆலோசகராக இருந்த, ஒய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய கட்டுரை.

உயர்ந்த மனிதன் பிஜு பட்நாயக்!

1994 பிப்ரவரி 14. ஒன்றிய அரசுப் பணி நியமன ஆணை வந்துவிட்டது. முதலமைச்சர் பிஜு பட்நாயக்கிடம் விடைபெறச் சென்றேன். “பாலா, நீ போகப்போவதில்லை. டிக்கெட்டை கேன்சல் செய்துவிடலாம்” என்றார். “சார்..வீட்டுப்பொருள் எல்லாம் பேக் பண்ணி லாரியில் அனுப்பத் தயாராக இருக்கிறது” என்றதற்கு “அதனால் என்ன, பிரித்துப்போட்டால் போகிறது” என்றார். பயந்துவிட்டேன். அவர் சத்தமாகச் சிரித்ததும்தான் மூச்சு வந்தது.

அந்த 90 நிமிட உரையாடல் நினைவுகளின் உள்ளடுக்குகளில் உட்கார்ந்திருக்கிறது. தேநீர் வந்ததும் கையில் எடுத்து எவ்வளவு சர்க்கரை என்று ஆங்கிலத்தில் கேட்டார். “தேட் சம்மச்” (ஒன்றரை ஸ்பூன்) என்று ஒடியாவில் சொன்னேன். கலந்து நீட்டினார்.

“சென்னை போஸ்டிங் எத்தனை ஆண்டுகள்? நீ எப்போது ஒடிசா திரும்புவாய்?”

“நான்கு ஆண்டுகள் சார். 1998 தொடக்கத்தில் திரும்புவேன்.”

“ஓ… அப்போது நான் இருக்க மாட்டேன்.”

“நீங்கள் அப்போது முதல் அமைச்சராக இல்லாமல் போகலாம். ஆனால் நான் உங்களை சந்திப்பேன்.”

“கம் ஆன். நான் முதலமைச்சராக இருப்பதைப் பற்றிச் சொல்லவில்லை. நான் இருக்கமாட்டேன் என்று சொல்கிறேன்” என்று அழுத்திச் சொன்னார்.

அந்த உரையாடல் அப்படி முடிந்ததில் இறுக்கமாக உணர்ந்தேன். 1997 ஏப்ரல் 17. பிஜு பட்நாயக் காலமானார். அப்போதே ஒரு தமிழ் நாளிதழில் ஒரு கட்டுரை எழுத நினைத்தேன். மறுயோசனையில் எழுதவில்லை.

பிஜுபட்நாயக் உத்தரப்பிர தேசத்தில் பிறந்திருந்தால் இரண்டு முறையாவது இந்தியாவின் பிரதமராகியிருப்பார். தமிழ்நாட்டிலோ ஆந்திராவிலோ பிறந்திருந்தால் அவரது வாழ்க்கை சாகசங்கள் குறைந்தது மூன்று திரைப்படங்களாகியிருக்கும்.

கல்லூரியில் படிக்கும்போது இரண்டு நண்பர்களோடு கட்டாக்கிலிருந்து பெஷாவருக்கு (இப்போது பாகிஸ்தான்) 2,500 கி.மீ சைக்கிளில் சென்றவர். 1930களில் இந்தியச் சாலைகள் எப்படி இருந்திருக்கும்?



.

Previous Post

கும்பமேளாவில் 45 நாள்களில் 30 கோடி வருவாய் ஈட்டிய படகோட்டி!

Next Post

Trichy Weather 5 March 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.54°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Trichy Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 19.98°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Trichy Weather 5 March 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.54°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In