Last Updated:
பிகார் சட்டமன்ற தேர்தல் 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசின் பதவிக்காலம் அடுத்த மாதம் 22ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்து பிகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்துள்ளனர்.
அதன்படி, பிகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு 6.11.25 அன்றும், இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு 11.11.25 அன்றும் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
வேட்புமனு தாக்கல்: 10.10.25
வேட்புமனு தாக்கல் இறுதி நாள்: 17.10.25
வேட்புமனு பரிசீலனை: 18.10.25
வேட்புமனு திரும்ப பெறுதல்: 20.10.25
வாக்குப் பதிவு நாள்: 6.11.25
வேட்புமனு தாக்கல்: 13.10.25
வேட்புமனு தாக்கல் இறுதி நாள்: 20.10.25
வேட்புமனு பரிசீலனை: 21.10.25
வேட்புமனு திரும்ப பெறுதல்: 23.10.25
வாக்குப் பதிவு நாள்: 11.11.25
இரண்டு கட்டங்களாக நடைபெறும் வாக்குப் பதிவுகளில் பதிவாகும் வாக்குகள் 14.11.25 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
முன்னதாக கடந்த வாரம் பிகார் மாநிலம் பாட்னாவிற்குச் சென்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வரும் 28 ஆம் தேதி சாத் பண்டிகை முடிந்ததும் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்துமாறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
October 06, 2025 4:37 PM IST
Bihar Elections 2025 Date: பிகார் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு… 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது!

