Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆந்திர வனப்பகுதியில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு.. வெளியான பகீர் தகவல்கள்! | இந்தியா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 18, 2025
in அரசியல் செய்திகள்
0
பில்லி சூனியம் வைத்தாரா..? ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரை உயிரோடு எரித்து கொன்ற கொடூரம்..! பிஹாரில் அதிர்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:September 18, 2025 2:59 PM IST

நாகப்பட்டினம் பாகொந்தொகை ஜெயமாலா, தர்ஷினி, ஹர்ஷினி, கலைச்செல்வம் ஆகியோர் திருப்பதி வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Rapid Read
கோப்புப்படம்கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆந்திராவில் உள்ள வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண், தனது இரு குழந்தைகள் உட்பட 4 பேருடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மூலவங்கா வனப்பகுதியை ஒட்டி துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை அவ்வழியாக சென்றவர்கள் இரண்டு பெண் குழந்தைகள் உட்பட 4 பேர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து பாக்காலா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் ஆண், பெண் உட்பட 4 பேரின் உடல்களை கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன், மர்ம மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையில் இறந்தவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் பாகொந்தொகை கிராமத்தைச் சேர்ந்த ஜெயமாலா, அவரின் மகள்கள் தர்ஷினி, ஹர்ஷினி மற்றும் உறவினர் கலைச்செல்வம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் ஜெயமாலாவின் கணவன் வெங்கடேஷ் குவைத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை சொந்த ஊரில் உள்ள மனைவிக்கு அனுப்பியுள்ளார். அந்த பணத்தை ஜெயமாலா தன்னுடைய உறவினராக கலைச்செல்வன் மூலம் வட்டிக்கு கொடுத்து வசூலித்து வந்துள்ளார். அண்மையில் குவைத்தில் இருந்து வெங்கடேஷ் சொந்த ஊர் திரும்பியுள்ளார். வந்ததும், தான் அனுப்பிய பணத்தை எங்கே என்று மனைவியிடம் கேள்வி கேட்டுள்ளார்.

ஆனால் ஜெயமாலா, கணவர் சம்பதித்து அனுப்பிய பணத்திற்கு கணக்கு காட்டாமல், சரியான பதிலும் அளிக்காமல் இருந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திடீரென, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜெயமாலா, தனது இரு மகள்களுடன் மாயமாகியுள்ளார். அவர்களுடன் சேர்ந்து, அவரின் உறவினர் கலைச்செல்வனும் காணாமல் போயுள்ளார். தனது மனைவி மற்றும் குழந்தகளை பல்வேறு பகுதிகளில் வெங்கடேஷ் தேடியுள்ளார்.

இதையும் படிங்க: நெல்லை ரயில் நிலையத்தில் முதியவரை அடித்து கொலை செய்த பிகார் இளைஞர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

எங்கு தேடியும் அவர்கள் கிடைக்காததால், திட்டச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பதிவு செய்த போலீசார், 4 பேரையும் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் காணாமல் போன 4 பேரும், திருப்பதி அருகே அடர்ந்த வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு உள்ளனர். இதில், ஜெயமாலா மற்றும் கலைச்செல்வம் முகத்தில் துணியை போட்டு மூடி பிளாஸ்டர் போட்டு ஒட்டப்பட்டுள்ளது. எனவே, அவர்களை யாரும் கொலை செய்தனரா அல்லது தற்கொலை செய்து கொண்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும், சம்பவ இடத்தில் இருந்து மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட சில பொருட்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். நாகப்பட்டினத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன 4 பேரும், திருப்பதி அருகே அடர்ந்த வனப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Tirupati,Chittoor,Andhra Pradesh

First Published :

September 18, 2025 2:59 PM IST



.

Previous Post

அதிமுக அமித்ஷாவின் அடிமையாகிவிட்டது: அமைச்சர் சேகர்பாபு

Next Post

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In