பெலகாவி: ”கர்நாடக எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ., தலைவரை மாற்றும் வரை, பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு நான் செல்ல மாட்டேன்,” என்று, அக்கட்சி எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் அறிவித்துள்ளார்.
விஜயபுரா தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால். மூத்த தலைவரான இவர், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பதவி எதிர்பார்த்தார். ஆனால், கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியில் உள்ளார். பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சி தலைவர் அசோக் மீது, கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், பெலகாவியில் நேற்று துவங்கியது. கூட்டத்திற்கு முன்பு, சுவர்ணா விதான் சவுதாவில் எத்னால் அளித்த பேட்டி:
வட மாவட்ட மக்கள் பிரச்னை குறித்து, பெலகாவி கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும். வட மாவட்ட எம்.எல்.ஏ., ஒருவருக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவி கேட்டேன். தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு கொடுத்து உள்ளனர். நாங்கள் ஒன்றும், அவர்களுக்கு அடிமை இல்லை. பா.ஜ., மாநில தலைவர், எதிர்க்கட்சி தலைவராகும் அனைத்து தகுதியும் எனக்கு இருந்தது.
நான் யாருக்கும் பயப்படுபவன் இல்லை. ஊழல் செய்தது இல்லை. அரசு நிலத்தை அபகரிக்கவில்லை. பழைய மைசூரில் இருந்து முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். வட மாவட்டத்திற்கு பதவி கிடைக்க வேண்டாமா.
எங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, எந்த போராட்டத்திற்கு தயாராக உள்ளேன். எதிர்க்கட்சி தலைவர், பா.ஜ., தலைவரை மாற்றும் வரை, பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு, நான் செல்ல மாட்டேன். சட்டசபை கூட்டத்தில், வட மாவட்ட மக்கள் குரலாக ஒலிப்பேன்.
இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

